இந்த 3 ராசியில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்களாம்
ஜோதிடத்தை பொருத்தவரை ஒவ்வொரு ராசி நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கும். மேலும் அந்த ராசி நட்சத்திரத்தின் குணாதிசயங்கள் அந்த ராசி நட்சத்திரத்தில் பிறந்த நபர்களிடத்தில் பிரதிபலிப்பதையும் நாம் பார்க்க முடியும்.
அப்படியாக ஒரு குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருந்து கொண்டு இருப்பார்களாம். அவர்கள் தொழில் செய்யும் இடமாக இருக்கட்டும் அல்லது குடும்பமாக இருக்கட்டும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். மேலும், இந்த ராசியில் பிறந்த பெண்களை எல்லோருக்கும் பிடிக்கும். அப்படியாக அவர்கள் எந்த ராசி பெண்கள் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசி பெண்களுக்கு ஓய்வு என்ற ஒரு விஷயமே பிடிக்காது. அவர்கள் ஓய்வெடுக்கவே விரும்ப மாட்டார்கள். ஏதேனும் ஒரு வேலையை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மேலும் ரிஷப ராசி பெண்கள் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருப்பதை நாம் பார்க்க முடியும். ரிஷப ராசி பெண்கள் அவர்கள் குடும்பத்தில் மற்றும் தொழில் செய்யும் இடங்களிலும் அவர்கள் சுற்றி உள்ளவர்களை எப்பொழுதும் கவனமாக பார்த்துக் கொள்வதில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்த பெண்களுடைய மனம் ஏதேனும் சிந்தனை செய்து கொண்டே இருக்கும். அதேபோல் ஏதேனும் ஒரு வேலையை இவர்கள் முன்வந்து எடுத்து செய்து கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் எப்பொழுதும் இருப்பார்கள். கன்னி ராசியில் இருக்கக்கூடிய பெண்கள் வீட்டில் எப்பொழுதும் அனைவரையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலையை இவர்கள் உருவாக்கி விடுவார்கள். வேலை செய்யும் இடங்களிலும் இவர்களுக்கு கொடுத்த வேலையை முதலில் முடித்து நற்பெயர் பெற்று விடுவார்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்த பெண்கள் எல்லாவற்றையும் சரியாக செய்ய வேண்டும் என்ற ஒரு கவனம் இவர்களிடத்தில் இருந்து கொண்டே இருக்கும். மேலும் ஒரு வேலையை ஒருவர் சரியாக செய்யாவிட்டால் அதை அவர்கள் பொருட்படுத்தாமல் இவர்களை முன்வந்து அந்த வேலையை செய்து முடிக்கும் அளவிற்கு இவர்கள் அதிக அளவில் வேலைப்பளுவை எடுத்துக்கொண்டு பார்க்கக்கூடிய ஒரு சுறுசுறுப்பான பெண் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் இவர்களால் ஓரிடத்தில் அமைதியாக இருக்க முடியாது. இவர்களை சுற்றிலும் எல்லா விஷயங்களும் மிகச் சரியாக நடக்கிறதா என்பதை இவர்கள் கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |