உண்மை காதல் எப்படி இருக்க வேண்டும்? கிருஷ்ணர் ராதை காதல் உணர்த்தும் உண்மை
இந்த உலகத்தில் ஒருவர் மீது நாம் வைத்திருக்கக் கூடிய அன்பும் காதலும் தான் நம்மை பல நேரங்களில் பலதூரம் கூட்டி செல்லக்கூடிய ஒரு வழி துணையாகவே அமைந்து விடுகிறது. மேலும் நாம் விரும்பிய நபருடன் எப்பொழுதும் உடன் இருந்து பயணிக்க வேண்டும் என்று தான் ஆசை கொள்வோம். ஏன் அதுதான் காதலுடைய அம்சமும் கூட.
ஆனால் அனைவரும் விரும்பக்கூடிய கிருஷ்ணர் ராதை காதல் கதையில் கிருஷ்ணன் பகவான் ராதையை விட்டு பிரிந்து செல்கிறார். அவ்வாறு கிருஷ்ணர் ராதையின் பிரிவு நமக்கு உணர்த்தும் உண்மைகள் என்ன? மேலும் உண்மையான காதல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
கிருஷ்ண பகவானுடைய அவதாரமே அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்பதற்காகவே எடுத்த ஒரு அவதாரமாகும். அப்படியாக கிருஷ்ண பகவான் கம்சனை எதிர்த்து தர்மத்தை நிலை நாட்ட அவர் பிருந்தாவனத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை வந்தது. இவ்வாறு செல்ல வேண்டியது கிருஷ்ண பகவான் உடைய கடமை.

அந்த நேரத்தில் அவர் தன்னுடைய காதல், அன்பு அனைத்தையும் விட்டு தர்மத்தை நிலைநாட்ட அவருடைய பாதையை நோக்கி செல்ல வேண்டிய நிலையில் இருந்தார். அந்த வேளையில் கிருஷ்ண பகவான் தர்மத்திற்கு கட்டுப்பட்டு நடந்து கொண்டார். என்னதான் அவர் ராதை மீது அளவு கடந்த அன்பும் பிரியமும் வைத்திருந்தாலும் அவருடைய கடமையை காதல் எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்பதில் மிகவும் தெளிவாகவும் இருந்தார்.
அதோடு கிருஷ்ணர் ராதை அவர்களுடைய பிணைப்பு என்பது சாதாரணமாக உருவான ஒரு காதல் கதை அல்ல. அவை பல ஜென்மங்களாக ஆன்மா ரீதியாக புரிந்து கொண்ட ஒரு அற்புதமான உறவாகும்.
ஆதலால் கிருஷ்ண பகவான் தன்னுடைய தர்மத்தை நிலை நாட்டுவதற்காக ராதையை விட்டு பிரிந்தது என்பது கவலைகள் உருவாக்குவதை தாண்டிலும் அந்த காதலுடைய உண்மை தன்மையையும் அவர்கள் காதலின் புரிதலையும் எடுத்துக்காட்டக்கூடிய ஒரு அற்புதமான பிரிதலாக அமைந்தது.
கிருஷ்ணர் மற்றும் ராதையின் பிரிவானது அவர்கள் இருவரும் ஒருவர் மீது அவர்கள் வைத்திருக்கக்கூடிய அளவு கடந்த அன்பையும் அவர்கள் காதலுக்காக எதையும் தாங்கிக் கொள்ள நினைக்கும் மனப்பான்மையும் எடுத்து காட்டுகிறது. ராதை கிருஷ்ணர் தன்னை விட்டுப் பிரிந்தார் என்று அவர் மீது கோபம் கொள்ளவில்லை.

அதை தவிர்த்து அளவு கடந்து கிருஷ்ணரை நினைத்து இன்னும் அவர் மீது அதிக அளவில் காதல் கொண்டிருக்கிறார். கிருஷ்ண பகவானும் ராதை தனக்காக அவள் காத்திருப்பாள் என்று புரிந்து கொண்டு இன்னும் அளவு கடந்த அன்பு கொள்கிறார். இதுதான் காதலின் உண்மைத்துவம் மற்றும் இதுதான் காதல் செய்யக்கூடிய அற்புதம்.
அதனால் இங்கு கிருஷ்ணர் மற்றும் ராதையின் காதலானது உடன் பயணிப்பதையும் தாண்டி பிரிந்து இருந்தாலும் அவர்களுடைய மனம் ஒன்றாக இணைந்து செயல்படுவதை உணர்த்துகிறது. கிருஷ்ணர் என்ன நினைக்கிறார் என்பதை ராதை புரிந்து கொள்ளவும், ராதை என்ன நினைக்கிறார் என்பதை கிருஷ்ணர் புரிந்து கொள்ளவும் இந்த தூரம் என்பது ஒரு விஷயமாக இல்லை என்பதை இவர்களுடைய காதல் கதை நமக்கு உணர்த்துகிறது.
ஆன்மா ரீதியாக கலந்துவிட்ட காதல் தூரமாக இருந்தாலும் அவர்களுடைய மனம் உரையாடிக்கொண்டு தான் இருக்கும் என்பதை நாம் அழகாக தெரிந்து கொள்ள முடிகிறது. ஆக காதல் என்பது புரிதல், காதல் என்பது இருப்பதை அவ்வாறே ஏற்றுக் கொள்வது.
காதலில் பிரிவு என்பது அவர்களைச் இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள நிகழும் ஒரு அற்புதமான வாய்ப்பு. அந்த பிரிவில் அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்துதான் அவர்களுடைய காதல் நிலைத்து நிற்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |