(12/04/2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?
மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்
மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு நேற்று வரை தடைபட்டிருந்த செயல் நிறைவேறும்.வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கி வரவு அதிகரிக்கும்.குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் அகலும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும்.கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு மற்றவரை அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும்.எதிர்பாராத பிரச்சினை உருவாக வாய்ப்பு இருப்பதால் செயல்களில் எச்சரிக்கை அவசியம்.மனதில் புதிய திட்டம் உருவாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வரும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்கள் பெருமைக்காக ஆடம்பர செலவு செய்வீர்கள்.நட்பு வட்டம் விரிவடையும்.எதிர்பார்த்தவற்றில் ஏமாற்றத்தை சந்திக்க வேண்டியதாக இருக்கலாம்.அலைச்சல் அதிகரிக்கும் நாள்.அதனால் செயல்களில் நிதானம் தேவை.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்று உங்கள் முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி அடைவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.தொழிலில் இருந்த தடை விலகி வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று நீங்கள் சிந்தித்து செயல்படுவீர்கள்.தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள்.சோர்வு நீங்க சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள் .வெளிவட்டாரத்தில் மதிப்பு உண்டாகும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.தடைகள் விலகும்.கடனாக கொடுத்த பணம் திரும்பி வரும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்று நீங்கள் கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.பழைய பாக்கிகள் வசூலாகும்.குடும்ப நெருக்கடிகள் விலகும்.திட்டமிட்டு வேலையை செய்வீர்கள்.பழைய அனுபவம் கை கொடுக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகி எதிர்பார்த்த வரவு வரும் நாள்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்று பயணத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க கூடும். உங்கள் செயலில் பலன் உண்டாகலாம் .செயல்களில் தடுமாற்றமும் குழப்பமும் அதிகரிக்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மற்றவருடன் அனுசரித்து செல்வதால் நன்மை அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி சாதகமாக அமையும்.வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட பிரச்சனை முரண்பாடுகள் விலகும்.வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் சரி செய்வீர்கள். நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலில் வெற்றி மேற்கொள்வீர்கள். உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்று மற்றவர்களால் முடியாத ஒரு செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரம் முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். உடல்நிலை சீராகும். எதிர்ப்புகள் விலகும்.உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேற கூடிய நாள்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்று வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். நேற்றைய எண்ணம் நிறைவேறும். பெற்றோர் ஆதரவால் முயற்சிகள் வெற்றிகரமாக அமையும்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனை தீரும்.செலவு காரணமாக இருப்பு குறையும். குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பீர்கள். திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள்.தாயின் உடல் நிலையில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்று வழக்கமான செயல்களில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய நம்பிக்கை உண்டாகும். உங்கள் முயற்சிகள் லாபம் உண்டாகும். நினைத்ததை முடித்து திருப்தி அடைவீர்கள். வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகி திட்டமிட்ட முயற்சிகளை சாதகமாக முடித்துக் கொள்வீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |