இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (04.06.2024)

Report

மேஷம்

அசுவினி: அதிர்ஷ்டமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு முடிவு காண்பீர். எதிர்பார்த்த வரவு வரும்.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எதிர்பராத நெருக்கடி தோன்றும். முயற்சி இழுபறியாகும்.

ரிஷபம்

நெருக்கடி விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வெளியூர் பயணம் நன்மை தரும்.கவனமாக செயல்பட வேண்டிய நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.

மிதுனம்

முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும். முயற்சி நிறைவேறும்.நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.

கடகம்

விருப்பம் பூர்த்தியாகும் நாள். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.செயல்களில் சங்கடம் காணும் நாள். பணிபுரியும் இடத்தில் மற்றவரை அனுசரித்துச் செல்வது நல்லது.

சிம்மம்

யோகமான நாள். திட்டமிட்ட செயல் நடந்தேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.மற்றவர்களால் அலைச்சல் அதிகரிக்கும் நாள். உங்கள் மனதிற்கு சங்கடம் உண்டாகும்.

ஏழு பிறவிகள் இருப்பது உண்மையா?

ஏழு பிறவிகள் இருப்பது உண்மையா?


கன்னி

முருகன் அருளால் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். செல்வாக்கு உயரும்.தடைகளை சந்திக்கும் நாள். அலைச்சல் அதிகரித்து உடல் சோர்வடையும். செயல்களில் சிரமம் தோன்றும்.

துலாம்

விருப்பம் நிறைவேறும் நாள். கூட்டுத் தொழில் லாபமடையும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.

விருச்சிகம்

மனதில் இருந்த குழப்பம் தீரும். தொழிலில் உண்டான போட்டி விலகும். எதிரிகள் விலகிச் செல்வர்.காரியத்தில் வெற்றி காணும் நாள். செயல்களில் முழுமையாக கவனம் செலுத்துவது அவசியம்.

தனுசு

செயல் வெற்றியாகும் நாள். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். வரவேண்டிய பணம் வரும். தடைகளைத் தாண்டி வெற்றி பெறும் நாள். உங்கள் கவனக்குறைவால் சில சங்கடங்களை சந்திப்பீர்.

மகரம்

நினைத்தது நிறைவேறும் நாள். தொழிலில் இருந்த தடை விலகும். வியாபாரம் லாபம் அடையும்.குல தெய்வத்தை வழிபட்டு செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும்.

கும்பம்

எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். பொருளாதார நெருக்கடி நீங்கும்.குழப்பத்திற்கு ஆளாகும் நாள்.உங்கள் செயல்களில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்.

மீனம்

நெருக்கடி நீங்கும் நாள். உங்கள் முயற்சி லாபமடையும். எதிர்பார்த்த பணம் வரும்.தடைகளை சந்திக்கும் நாள். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி தள்ளிப்போகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US