இன்றைய ராசி பலன்கள் (23.05.2024)

Report

மேஷம்

கவனமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சிகளில் தடைகளும் தாமதமும் உண்டாகும்.திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உடல்நிலை சீராகும்.

ரிஷபம்

உங்கள் செயல்களில் நீங்கள் நினைத்ததற்கு மாறாக சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பொன்பொருள் சேர்க்கை ஏற்படும்.

மிதுனம்

உத்தியோகத்தில் அடுத்தவர் செய்யும் தவறுக்கு நீங்கள் பதில் சொல்ல நேரும்.விவேகமுடன் செயல்பட்டு வெற்றி காணும் நாள். தடைபட்டிருந்த வருவாய் வந்துசேரும்.

கடகம்

எதிர்பார்த்த பணம் வந்துசேரும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் உண்டாகும்.

சிம்மம்

உறவுகளால் சங்கடங்கள் தோன்றும் நாள். மனம் குழப்பமடையும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். சங்கடங்கள் விலகும் நாள். உங்கள் முயற்சியால் அனைத்தையும் சரிசெய்வீர்கள். 

கன்னி

நெருக்கடிக்கு ஆளாகும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உங்கள் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை வெற்றியாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் அதிகரிக்கும்.

மூன்று கோலங்களில் காட்சி தரும் முருகப்பெருமான்

மூன்று கோலங்களில் காட்சி தரும் முருகப்பெருமான்


துலாம்

குடும்பத்தில் சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். வரவு செலவில் சங்கடம் உண்டாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைப்பதை சாதிக்கும் நாள்.

விருச்சிகம்

நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த உங்கள் வேலை இன்று முடியும்.வேலைப்பளு அதிகரிக்கும். சிலருக்கு பணியிடத்தில் பிரச்னை உண்டாகும்.

தனுசு

செலவுகள் அதிகரிக்கும் என்பதால் நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். அலுவலகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

மகரம்

உங்கள் வேலைகளில் தடைகள் ஏற்படும். கவனமாக செயல்படுவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும்.நெருக்கடிகள் நீங்கும் நாள். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். உங்கள் செயல்கள் வெற்றியாகும்.

கும்பம்

உங்கள் முயற்சி இழுபறியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.

மீனம்

வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வரவேண்டிய பணம் வந்துசேரும்.மனதில் குழப்பம் அதிகரிக்கும். பணியிடத்தில் மறைமுகத் தொல்லை உண்டாகும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US