இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (19.06.2024)

Report

மேஷம்

மன சோர்வு உடல் சோர்வு நீங்கி உற்சாகமாக செயல் படும் நாள்.அலுவலகத்தில் வேலை பளு குறையும்.சமுதாயத்தில் அந்தஸ்து உயரும்.இன்று அதிகம் சிந்தித்து செயல் படுவதால் பல நன்மைகள் உண்டாகும்.

ரிஷபம்

திட்டமிட்டு செயல்படுவதால் வ்யாபாரத்தில் நல்ல லாபம் காணலாம்.மறைமுகமான எதிரிகள் தொல்லை விலகும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

மிதுனம்

மனம் குழப்பம் அடையும்.வேலையில் எதிர்பாராத நெருக்கடிகள் உருவாகலாம்.திடீர் வெளியூர் பயணம் ஏற்படும்.சற்று கவனமாக செயல்படவேண்டிய நாள்.

கடகம்

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.குடும்பத்தில் அக்கறை செலுத்துவீர்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு பிரச்னைகளை சரி செய்வீர்கள்.

சிம்மம்

வியாபாரத்தில் திடீர் நெருக்கடிகள் உண்டாகலாம்.இறைவழிபாடு நன்மை தரும்.எதிர்பாராத பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும்.

கன்னி

எதிர்காலத்தை பற்றிய சிந்தனை மனதை வருடும்.படிப்பில் சிறந்து விளங்குவீர்கள்.இன்று புதிய முயற்சிகள் எடுப்பதை ஒத்தி வைப்பது நன்மை தரும்.பணியாளர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும்.

துலாம்

இன்று மனம் தெளிவு அடையும் நாள்.குழப்பங்கள் விலகி வேலையில் கவனம் செலுத்துவீர்கள்.சமுதாயத்தில் அந்தஸ்து உயரும்.இறை வழிபாடு நன்மை பெற்றுத்தரும்.

விருச்சிகம்

மனதில் இனம் புரியாத சந்தோசம் உண்டாகும்.பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். சங்கடங்கள் விலகும்.

தனுசு

நேற்றைய நாள் போல் மன சோர்வு இல்லாமல் தைரியமாக எதையும் சாதிக்கலாம் என்று மனநிலை உண்டாகும்.மற்றவரை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். அலைச்சல் அதிகரிக்கும்.

மகரம்

உங்கள் முயற்சி வெற்றியாகும். வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த வருவாய் வரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

கும்பம்

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் தோன்றும்.குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

மீனம்

குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.மனதில் தைரியம் பிறக்கும்.திடீர் வேலைப்பளுவால் அலைச்சல்கள் ஏற்படலாம்.இருந்தாலும் தைரியமாக சமாளிப்பீர்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US