ஜோதிடம்: எப்பொழுதும் சோகமாக இருக்கிறீர்களா? கவனிக்க வேண்டிய விஷயங்கள்
நாம் வெளியில் எங்கயாவது சென்று வர, உடல் அசதியால் நாம் மந்தமாக காணப்படுவது இயல்பு என்றாலும், சிலருக்கு காரணம் இன்றி உடல் சோர்வு உண்டாகும். அதனால் அவர்கள் உற்சாகம் இழந்து காணப்படுவார்கள்.
இவ்வாறு ஏற்படும் பொழுது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு பின்னால் ஜோதிடம் ரீதியாக சில முக்கிய விஷயங்கள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
ஜோதிடம் ரீதியாக, நாம் எதிர்மறை மற்றும் நேர்மறை சக்திகளுக்கு எளிதாக ஈர்க்கப்ட்டு விடலாம். ஆனால், இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், நேர்மறை ஆற்றலை காட்டிலும், எதிர்மறை ஆற்றலுக்கு நாம் மிகவும் எளிதாக ஈர்க்கபட்டு விடுவோம்.
அவ்வாறு நடக்கும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் சில மாற்றங்களை சந்திக்கக்கூடும். இதனால், எரிச்சல், வீண் கோபம், பதட்டம் போன்ற சூழல் உருவாகும். அதே போல், நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களாலும் அவர்களுடைய எண்ண அலைகளாலும் நாம் பாதிக்கப்படுவோம்.
ஆதலால் எப்பொழுதும் நல்ல எண்ணம் கொண்ட மனிதர்களுடன் பழகுவது மிக முக்கியமானதாகும். மேலும், சிலருக்கு இயல்பாகவே ஒருவர் நல்ல முறையில் இருந்தால் பிடிக்காது. அவர்களுக்கு அந்த நபர் எப்படியாவது வீழ்ந்து போகவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருப்பார்கள்.
அந்த பொறாமையின் வெளிப்பாட்டால், அவர்களின் பார்வையும் நம்முடைய எனர்ஜியை பாதிக்கக்கூடும். இதனாலும் நாம் மனசோர்வு அடுத்து எந்த முயற்சியும் எடுக்க முடியாமல் தடங்கல் அடைவது போன்ற சூழல் உருவாகும்.
அடுத்து மிக முக்கியமாக, சக்கரங்கள் அடைப்பு. நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளன. இந்த சக்கரங்களில் அடைப்பு ஏற்பட்டால், சோர்வு, மனஅழுத்தம் போன்ற சூழல் உருவாகும். இதனை தியானம் செய்வதால் மட்டுமே குணப்படுத்த முடியும். இன்னொரு முக்கியமான விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.
அதாவது, சந்திரனின் சுழற்சி காரணமாகவும் நம்முடைய உடலில் சில மாற்றங்கள் உண்டாகலாம். அதாவது, சந்திரன் நம்முடைய மனநிலையை பாதிக்க கூடிய தன்மை கொண்டது. அமாவாசை நாட்களில் சோர்வு, முழுநிலவு நாட்களில் உணர்ச்சி வசப்படுதல் போன்றவை ஏற்படும்.
சந்திரனின் சுழற்சிகளை புரிந்து கொண்டு நம்மை நாமே பராமரித்துக்கொள்ள வேண்டும். அதே போல், கிரகங்களுக்கும் இந்த பங்கு உண்டு.
நம் பிறப்பு ஜாதகத்தில் சனி போன்ற கிரகங்கள் சில சமயங்களில் சவால்களை உருவாக்கும்.அதன் காரணமாகவும் நம்முடைய மனம் சோர்வடைந்து காணப்படும். ஆக, இதற்கு ஏற்றது போல் நம் வாழ்க்கையில் நாம் மிக கவனமாக இருக்கவேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |