இறந்தவர் வீட்டிற்கு செல்வது 1000 கோவில்களுக்கு செல்வது சமம்.. காரணம் என்ன?

By Sakthi Raj Aug 15, 2026 04:47 AM GMT
Report

 இந்த உலகத்தில் நாம் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அதிகம் உள்ளது. ஒருவர் இன்று நான் இந்த விஷயத்தில் தேர்ச்சி பெற்று விட்டேன் என்று யாராலும் எவராலும் மார்தட்டிக் கொள்ள முடியாது. அந்த அளவிற்கு இந்த உலகத்தில் இன்னும் இன்னும் என்று கற்று தெளிய கொள்ள வேண்டியவை அதிகம் உள்ளது.

அந்த வகையில், நம்முடைய முன்னோர்கள் ஒருவருடைய இறந்த வீட்டிற்கு செல்வது ஆயிரம் கோவில் செல்வது போன்றது என்று சொல்லி இருக்கிறார்கள். இதற்கு பின்னால் காரணம் என்னவென்று பார்ப்போம்.

இறந்தவர் வீட்டிற்கு செல்வது 1000 கோவில்களுக்கு செல்வது சமம்.. காரணம் என்ன? | Attending Funeral Is Equal To Going 1000 Temples

இந்த மனிதனுடைய வாழ்க்கையே இறப்பிலிருந்து தான் துவங்குகிறது. இறப்பிலிருந்து தான் ஒரு மனிதனுக்கு உண்மை நிலை புரிகிறது. ஆடிய ஆட்டமெல்லாம் ஒரு நாள் காணாமல் போகும் அந்த உண்மைத் தன்மை தான் நாம் யார் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

ஒவ்வொரு உயிரினத்தின் உடைய இறப்பும், வாழும் ஒவ்வொரு உயிர்களுக்கும் ஒரு பாடமாகவே அமைகிறது. மனிதன் இருக்கின்ற வேளையில் நமக்கு என்ன கற்றுக் கொடுக்கின்றான் என்பது தெரியாது. ஆனால், ஒருவன் மனிதனுடைய இறப்பில் அவன் பல மனிதர்களுக்கு நிறைய பாடங்களை மட்டும் கற்றுக் கொடுத்து வருகிறார்.

ஆக, ஒரு மனிதனின் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்பது என்பது ஒரு கருணைமிக்க செயல் என்று கருதப்படுகிறது. அதோடு, ஒரு மரணம் அடைந்தவர்களுக்கு நாம் கொடுக்கக்கூடிய கடைசி மரியாதை மட்டுமல்ல அது உயிருடன் இருக்கக்கூடிய நம் மனங்களுக்கு ஒரு ஆழமான உணர்வை கொடுக்கிறது.

இறந்தவர் வீட்டிற்கு செல்வது 1000 கோவில்களுக்கு செல்வது சமம்.. காரணம் என்ன? | Attending Funeral Is Equal To Going 1000 Temples

இறந்த ஒருவரை இறுதியாக பார்க்கின்ற பொழுது அவர் இனிமேல் இந்த உலகில் இல்லை என்ற உண்மையை மனம் ஏற்றுக்கொள்ள உதவுகிறது. அவர்களுடைய அந்த கடைசி விடைபெறுதல் பயணத்தில் உள்ளத்தின் வலியை தனியாக சுமந்து கொள்ளாமல் குடும்பத்தோடும் சமூகத்தோடும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு புனித வாய்ப்பாகும்.

ஆக, நீங்கள் கோவில்களுக்கு செல்ல வேண்டாம், ஒருவருடைய திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் நெருங்கியவர்கள் இறப்பு அல்லது நெருங்கியவர்களுடைய குடும்பத்தினர் இறக்க நேர்ந்தால் கட்டாயமாக அங்கு சென்று வாருங்கள். அது ஆயிரம் கோவில்களுக்கு சென்ற சமம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US