3 நாளில் குரு பெயர்ச்சி.. இந்த 3ராசிகளுக்கு வசந்த காலம் தேடி வருகிறது
ஜோதிடரீதியாக குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக இருக்கிறார். குரு பகவான் 12 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுகிறார். இதனால் 12 ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் தாக்கம் உண்டு செய்யும். அந்த வகையில், ஆகஸ்ட் 19ஆம் தேதி குரு பகவான் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
இந்த ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதியாக புதன் பகவான் இருக்கிறார். இந்த பெயர்ச்சியினால் 3 ராசிகளுக்கு அடுத்து சில நாட்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வசந்த காலமும் வீசப்பபோகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

மிதுனம்:
குரு நட்சத்திர பெயர்ச்சியால் இவர்களுக்கு இந்த காலகட்டம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வேலை இடங்களில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். பாராட்டுக்கள் தேடி வரும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். நினைத்த காரியம் நிறைவேறும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சி இவர்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுபட வைக்க போகிறது. திருமண தடைகள் விலகும். புதிய வேலை தொடங்குவதற்கான நேரம் சாதகமாக இருக்க போகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் விலக முக்கிய முடிவுகளை துணிச்சலாக எடுப்பீர்கள். தொலைதூரத்தில் இருந்து நற்செய்திகள் தேடி வரும்.
தனுசு:
குரு நட்சத்திர பெயர்ச்சியால் இவர்களுக்கு நேர்மறை ஆற்றல் உண்டாகும். புதிய வெற்றிக்கான பாதை பிறக்கும். தொழிலதிபர்களுக்கு பெரிய ஒப்பந்தங்களில் கை கையெழுத்து போடுவதற்கான வாய்ப்பு பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு. உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும், குடும்பத்தில் சுப காரியம் நடக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |