சிம்ம ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?

By Sakthi Raj Aug 14, 2026 03:00 PM GMT
Report

ஜோதிட ரீதியாக சூரிய பகவானின் ஆதிக்கத்தை பெற்ற சிம்ம ராசி மற்றும் சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தலைமைத்துவ பண்பில் சிறந்து விளங்க கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் ஒரு இடத்தில் இருந்தால் அவர்கள் மிகப்பெரிய ஆளுமை தன்மையோடு காணப்படுவார்கள். அந்த வகையில், இந்த சிம்ம ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களுடைய திருமண வாழ்க்கை மற்றும் காதல் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

சிம்ம ராசிக்காரர்கள் மிகுந்த தைரியம் மற்றும் துணிச்சல் கொண்டவர்கள். காதலுக்கு அதிக மரியாதை கொடுப்பார்கள். இவர்களுடைய ஆளுமைக்கு இணையாக அவர்களுடைய வாழ்க்கை துணை அமைவார்கள்.

27 நட்சத்திரக்காரர்களினுடைய குண நலன்கள் என்ன ? தெரிந்து கொள்ளலாம் வாங்க

27 நட்சத்திரக்காரர்களினுடைய குண நலன்கள் என்ன ? தெரிந்து கொள்ளலாம் வாங்க

ஆனாலும், இவர்களுடைய திருமண வாழ்க்கையில் காதல் என்று எடுத்துக் கொண்டால் குடும்பம் மற்றும் சமுதாயத்தின் சில எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய நிலை வரும்.

இவர்கள் விடாப்படியாக இருந்தால் மட்டுமே அவர்களுடைய காதலில் ஜெயிக்க முடியும். திருமண வாழ்க்கை பொருத்தவரை இவர்கள் நிறைய விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். இவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஆதலால் திருமண வாழ்க்கையில் இவர்கள் சில எதிர்ப்புகளை சந்திக்கலாம். கவனமாக கையாள்வது அவசியம். மேலும், சிம்ம ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US