அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு.. 2027 வரைக்கும் இவர்களுக்கு தான் பொற்காலமாம்
ஜோதிடத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்களில் ஒன்றாக ராகு பகவான் இருக்கிறார். இவர் ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் வரை பயணம் செய்கிறார். அவர் தற்பொழுது தனது நட்சத்திரத்தை மாற்றக்கூடிய நிலையில் உள்ளார்.
இவ்வாறு மாறக்கூடிய நிலை ஒவ்வொரு ராசிக்கும் பெரிய அளவில் திருப்பங்களை கொடுக்கும். தற்போது ராகு பகவான் கும்ப ராசியில் இருக்கக்கூடிய அவிட்டம் நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகிறார். அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். இவர் தான் ஒருவரின் செல்வம், வளர்ச்சி பற்றி ஆகியவற்றிக்கு இந்த நட்சத்திரம் தொடர்பு கொண்டது.
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகுவின் சஞ்சாரம் வருகின்ற 2027 ஏப்ரல் பத்தாம் தேதி வரை தொடர இருக்கிறது. இந்த காலகட்டங்களில் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் திருப்பங்கள் நடைபெறப்போகிறது. அவர்கள் எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

மிதுனம்:
இவர்களுக்கு இந்த காலகட்டம் பல்வேறு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்து இருந்த விஷயங்கள் கைக்கூடி வரப்போகிறது. வேலையில் வெற்றிகள் தேடி வரும்.
நீண்ட காலமாக முடிவிற்கு வராத காரியங்கள் நல்ல முடிவை பெறும். குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் இருக்கும். தாய் வழி உறவினர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். இடமாற்றம் சாதகமான பலன் கொடுக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகுவின் இந்த நட்சத்திர மாற்றம் இவர்களுக்கு நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள் உதவியுடன் செய்யக்கூடிய வேலையில் முயற்சியில் ஒரு நல்ல முன்னேற்றம் இருக்கப் போகிறது.
முதலீடு தொடர்பான விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மனக்கசப்புகள் ஆகியவை விலகும். புத்திசாலித்தனத்தால் நினைத்ததை சாதிப்பீர்கள்.
கும்பம்:
இவர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கொண்டு வந்து சேர்க்க போகிறது. குடும்ப உறவுகளில் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடங்களில் இவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும்.
நீண்ட காலமாக உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றமும் தொழிலை விரிவு படுத்துவதற்கான பண வரவுகளும் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |