இந்த வருடம் சபரிமலை செல்லும் பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

By Sakthi Raj Nov 09, 2025 09:33 AM GMT
Report

  ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து வழிபாடு செய்வார்கள்.

அப்படியாக இந்த 2025 ஆம் ஆண்டு சபரிமலை சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்று இருக்கும் பக்தர்கள் ஐயப்ப கோவில் நடை திறக்கும் நேரம் மற்றும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான 10 விவரங்களை பற்றி பார்ப்போம்.

இந்த வருடம் சபரிமலை செல்லும் பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் | Ayyappa Devotees Must Know This For 2025 Yatra

1. 2025 ஆம் ஆண்டு மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் ஐயப்பன் கோவில் நவம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

2. மேலும் நவம்பர் 17ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் ஐயப்ப பக்தர்களுக்கு சுவாமியை தரிசனம் செய்ய அனுமதி கொடுக்கப்படுகிறது.

3. இந்த வருடம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நவம்பர் 17ஆம் தேதி அன்று துவங்கி டிசம்பர் 27ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

4. மேலும் நவம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜை முடிந்த பிறகு இரவு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படுகிறது.

5. பிறகு மீண்டும் டிசம்பர் 30-ஆம் தேதி அன்று மகர விளக்கு  மகோற்சவத்திற்காக  ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படுகிறது.

உள்ளங்கை அரித்தால் பணம் வருமா? முழு விவரங்கள் இதோ

உள்ளங்கை அரித்தால் பணம் வருமா? முழு விவரங்கள் இதோ

6. 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி மகர சங்கராந்தி நாளில் மகர விளக்கு உற்சவம் நடைபெற உள்ளது.

7. 2026 ஜனவரி 20 ஆம் தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும். ஆதலால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தொடர்ந்து அனுமதிக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.

8. இந்த ஆண்டுக்கான சுவாமி தரிசனம் மற்றும் பூஜை வழிபாடுகள் செய்வதற்கும் சன்னிதானத்தில் தங்குவதற்கான ஆன்லைன் புக்கிங் நவம்பர் 5ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

9. இந்த வருடம் சபரிமலை செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு இருப்பவர்கள் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு சென்று உங்களுடைய ஆதார் மற்றும் மொபைல் எண் மற்றும் உங்களுடைய பெயரை பதிவிறக்கம் செய்து முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

10. இந்த வருடம் ஆன்லைன் வழியாக முன் பதிவு செய்து வரும் பக்தர்கள் ஒரு நாளைக்கு 70 ஆயிரம் மட்டுமே அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US