அழிவின் அறிகுறிகளை கண்டறிந்த விஞ்ஞானிகள்- இதை அன்றே கணித்த பாபா வாங்கா
உலக தீர்க்கதரிசிகளின் பாபா வங்காவும் ஒருவர். இவரின் கணிப்பு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய வகையில் இருக்கும். அப்படியாக, இவர் எதிர்காலத்தை பற்றி சிறப்பாக கணித்து சொல்லக்கூடியவர்.
ஆண்டுதோறும் உலக நடப்புகள் பெரும்பாலும் இவர் சொன்னது போல் நடந்து இருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அப்படியாக, பாபா வாங்கா 2025 ஆம் ஆண்டு உலகம் அழிய தொடங்கும் என்று கணித்து உள்ளார்.
அதோடு 5079ஆம் ஆண்டு உலகம் முழுவதுமாக அழியும் என்றும், அப்போது பூமியில் மனிதர்கள் இருக்கமாட்டார்கள் என்றும் அவர் கணித்துள்ளார். குறிப்பாக ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படும் என்றும், அவை 2011 பேரழிவை விட மிகவும் மோசமான அழிவை ஏற்படுத்த நேரும் என்று அவர் கணித்து உள்ளார்.
அவர் சொன்னது போல் பூகம்ப ஆராய்ச்சி குழு மற்றும் அரசாங்கக் குழுவின் அறிக்கைகளின்படி, அடுத்த 30 ஆண்டுகளில் 7 அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதற்கான நிகழ்தகவு இப்போது 82% ஐ எட்டியுள்ளது, இது முன்பு 75% ஆக இருந்தது என்று கூறியுள்ளது.
அவர் கணித்தது போல் தற்போது நிலவரம் இருந்தாலும், கடைசி நேரத்தில் ஏதேனும் மாற்றங்கள் நடக்கிறதா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |