2026-ல் உலக அழிவு ஆரம்பம் - பாபா வங்காவின் மிரள வைக்கும் கணிப்புகள்
பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் பாபா வங்கா. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் உலக நடப்புகளை முன்கூட்டியே கணித்த தீர்க்கதரிசி என அழைக்கப்படுகிறார்.
பாபா வங்கா
1996 ஆம் ஆண்டு இவர் மறைந்தாலும் எதிர்காலம் குறித்து அவர் கூறிச் சென்ற கணிப்புகள் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு குறித்து பகீர் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

2026 ஆம் ஆண்டில் உலக அளவில் மிகப்பெரிய போர் தொடங்கும். உலக அதிகாரம் மேற்கத்திய நாடுகளில் இருந்து ஆசியாவை நோக்கி குறிப்பாக சீனாவை நோக்கி நகரும்.
2026 கணிப்புகள்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) 2026 இல் மிகப்பெரிய எழுச்சி பெரும். இயந்திரங்கள், ரோபோக்கள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை கட்டுப்படுத்தும் நிலைக்கு செல்லலாம்.
பூமியின் நிலப்பரப்பில் 7% முதல் 10% வரை பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை சீற்றங்களால் பாதிக்கப்படலாம்.
உலகப் பொருளாதார கடும் வீழ்ச்சியை சந்திக்கும், வங்கிகள் முடங்கும், கரன்சி மதிப்பு வீழ்ச்சியடையும், பணவீக்கம் காரணமாக கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும். தங்கத்தின் விலையும் 25% முதல் 48% வரை உயரும்.
நவம்பர் மாதத்தில் மனிதர்கள் வேற்று கிரகவாசிகளான ஏலியன்களுடன் தொடர்பு ஏற்படுத்துவார்கள். விண்வெளியில் இருந்து மிகப்பெரிய மர்மமான விண்கலம் ஒன்று பூமியின் வளிமண்டலத்திற்கு நுழையும் என்று குறிப்பிட்டுள்ளார்.