உங்கள் மன கவலைகள் நீங்க முதலில் செய்யவேண்டியவை
உலகமே ஒரு அதிசயம் தான்.மனிதன் முதல் விலங்குகள் வரை எல்லாமே ஆச்சிரியம் நிறைந்ததாக இருக்கிறது.அப்படியாக மனிதனாக பிறந்த உயிர்கள் எல்லாம் இன்பம் துன்பம் என்று விதியை கட்டாயம் அனுபவித்தே ஆகவேண்டும்.
இதில் மனிதன் மிக கொடுமையாக நினைப்பது அவனுக்கு காலம் கொடுக்கும் துன்பத்தை தான்.மனிதனானவனுக்கு உலகம் நிரந்தரம் இல்லை.எதுவும் கடந்து போகும் என்ற உண்மை உணர்ந்திருந்தாலும் அவனால் சிறு துன்பத்தை கடக்க முடிவதில்லை.
காரணம் இந்த மொத்த பிரபஞ்சமும் அவனுக்கு சாதகமாக செயல்படவேண்டும் என்ற ஆசை தான்.ஆனால் பிரபஞ்சம் கொடுக்கும் துன்பத்தால் மட்டுமே அவனால் பல உண்மைகளை உணரமுடியும் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றான்.அப்படியாக ஏதோ ஒரு காரணத்தால் அல்லது காரணமே இல்லாமல் கூட இந்த உலகம் உங்களுக்கு எதிராக திரும்பப்படும்.ஏன் எல்லாம் இழந்து நீங்கள் தனியாக நிற்கும் நிலை கூட வரட்டும்.தொட்டது எல்லாம் தோல்வியில் முடியட்டும்நீங்கள் மனதில் சொல்லவேண்டிய ஒரே விஷயம் பகவான் அருளிய கீதா சாரம் இதை ஒன்றை தான்.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது,
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது,
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது,
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்
-பகவான் ஸ்ரீ கிருஷணர்
பிறப்பின் மொத்த ரகசியத்தை பகவான் மிகவும் எளிதாக பகவான் கிருஷ்ணர் சொல்லிவிட்டார்.ஆனால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் மனிதனுக்கு மனம் வருவதில்லை.என் உடல்,என் உயிர் என் உடமை என்று போராடி கொண்டு இருக்கின்றோம்.ஆக எப்பொழுது நாம் உண்மையை ஏற்று கொள்ள ஆரம்பிக்கின்றோமோ அப்பொழுது இருந்து இந்த பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்கும் துன்பத்தை நிறுத்தி விடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |