தீராத துயர் தீர்க்கும் சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பண்ணாரியில் அமைந்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதிக்கு அருகில் இருக்கிறது. கொங்குமண்டலத்தில் எல்லை காவல் தெய்வங்களையும் பெண் தெய்வங்களையும் அதிகமாக போற்றி வணங்குவார்கள்.
அந்த வகையில் சத்தி பண்ணாரி மாரியம்மன், தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா மலையேற்றப்பகுதியில் காவல் தெய்வமாகவும், புகழ்மிக்க பெண் தெய்வமாகவும் விளங்குகிறாள். இத்தகு சிறப்புமிக்க பண்ணாரி அம்மன் கோயில் உருவான விதம் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
தல வரலாறு 1:
பண்ணாரி அம்மன் கோயிலின் கம்பீரமான தோற்றமும், விசாலமான நிலப்பரப்பும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. சுற்றிலும் வனப்பகுதி, சுற்றித் திரியும் சிறிய வகை வன உயிரினங்கள், அரணாக மலை, அரண்மனை போல கோவில் அமைந்துள்ளதால், பண்ணாரி மாரியம்மன் வனம் ஆளும் தேவதையாக உள்ளார்.
கேரளாவில் உள்ள மன்னார்காடு பகுதியில் மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். அப்போது மக்கள் தங்களது விவசாய பொருட்களை ஊர் ஊராக சென்று விற்று வந்தனர். ஒரு முறை விவசாய பொருட்களை விற்க கிளம்பிய மக்களுக்கு வழிகாட்ட ஊர் தலைவன் இல்லாததால், அவர்கள் அம்மனை வேண்டி வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினர்.
அப்போது, “கவலைப்படாதீர்கள், நீங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு நான் வழிகாட்டுகிறேன்” என அம்மனின் குரல் ஒலித்தது. மக்கள் அம்மனைப் பின்பற்றி கிளம்பினர். அவர்கள் செல்லும் வழியில் ஒரு வனப்பகுதியை கடந்து, வேங்கை மரத்தின் நிழலில் ஓய்வு எடுத்தனர். அப்போது அம்மனும் அந்த மரத்தின் அடியில் அமர்ந்தார்.
தலைவன் திரும்பி வந்து வழிநடத்த, “இனி தலைவன் உங்களுடன் இருக்கிறான், நான் இங்கேயே இருக்கிறேன்” என்று அம்மன் சொன்னார். பாண்டியன் ஊரவர்கள் அந்த இடத்தில் கோவில் கட்டி வழிபட்டார்கள். பல ஆண்டுகளுக்கு பின்னர் புலிகள், சிறுத்தைகள் போன்ற விலங்குகள் வாழும் வனம் என்றாலும், மக்கள் அச்சமின்றி பட்டிகள் அமைத்து ஆடு மாடுகளை மேய்ப்பது வழக்கம்.
அப்படியொரு பட்டியில் இருந்த மாடுகளுக்கு நடுவில், காராம்பசு என்பது பால் தராமல் இருந்தது. மேய்ச்சல்காரன் சிறுவன், பசுவைப் பின்தொடர்ந்து அதன் போக்கைக் கவனித்தான். பசு வேங்கை மரத்துக்கு அருகில் சென்று பால் சொரிந்தது.
சிறுவன் இதை ஊருக்கு தெரிவித்தான். ஊர் மக்கள் அந்த இடத்தை சுத்தம் செய்தபோது, ஒரு சிறிய புற்றும், சுயம்புத் திருவுருவமும் கண்டனர். அப்போது கூட்டத்தில் ஒருவருக்கு அம்மன் அருள் வந்து, “மலையாள தேசத்திலிருந்து மைசூர் பட்டணத்துக்குப் பொதி மாடுகளை ஓட்டிச்சென்ற மக்களுக்கு வழித்துணையாக நான் வந்தேன்.
இவ்வனப்பகுதி எனக்குப் பிடித்துப்போனது. இங்கிருந்து செல்ல மனமில்லாமல் இங்கேயே தங்கிவிட்டேன். இங்கு கோவில் கட்டி வழிபட்டால், நான் உங்களை காத்தருள்வேன்” என்று அருள்வாக்குக் கிடைத்தது. ஊர் மக்கள் உடனடியாக அந்த இடத்தில் கணாங்குப் புற்களைக்கொண்டு குடிலொன்று அமைத்து, அம்மனைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள்.
அன்னையின் சாந்நித்தியம் பரவியது. பிற்காலத்தில் ஊர் மக்கள், அன்னைக்கு விமானத்துடன் கூடிய கோயிலை எழுப்பினர். இன்றைக்கு அர்த்த மண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் என விரிவடைந்து மிக அற்புதமாகத் திகழ்கிறது பண்ணாரி அம்மன் ஆலயம். அம்மன் சுயம்புவாகத் தோன்றிய இந்தக் கோயில் தெற்கு பார்த்து அமைந்திருப்பது தனிச் சிறப்பு.
தல வரலாறு 2:
பண்ணாரி மாரியம்மன் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அக்காலத்தில் சலவைத் தொழில் செய்யும் தம்பதி, சலவைத் துணி துவைப்பதற்காக சென்றனர்.
அப்போது அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். துணி துவைக்கும் வேளையில் கடுமையான மழை பெய்து கொண்டிருந்த நிலையில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. கணவன் சலவைக்கு கொண்டு வந்த சேலைகளை நால்புறமும் கட்டி தன் மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
இரு பெண் குழந்தைகள் பிறந்ததாக புராண வரலாறும் செவி வழி வரலாறுமாக உள்ளது. பின்னர் ஒரு குழந்தையை அவர் தூக்கியதாகவும் மற்றொரு குழந்தையை இருவராலும் தூக்க முடியவில்லை. பின் அவர்கள் அந்த குழந்தையை அருகில் இருந்த தாழியில் வைத்துவிட்டு மூவரும் சென்று நடந்ததை ஊர் தலைவரிடம் முறையிட்டுள்ளனர்.
பின் அவர்களுடன் அந்த குழந்தை இருக்குமிடம் சென்று அந்த குழந்தையை தூக்கி பார்த்த போது குழந்தையை தூக்க முடியவில்லை. பின் இரும்பு கடப்பாரை கொண்டு அந்த தாழியை தூக்க முற்பட்டனர். அப்போது அந்த குழந்தையின் வலது மார்பில் கடப்பாரை பட்டு இரத்தம் கசிந்துள்ளது.
(அதை இன்றளவும் நாம் பூஜையில் உண்ணிப்பாக கவனித்தால் அம்மனின் வலது மார்பில் சிறு காயங்கள் தென்படும்). காலையில் சென்று பார்க்கும் பொழுது அந்த தாழியின் உள்ளே இருந்த பெண் குழந்தை வடிவில் அம்மனாக எழுந்தருளி இருந்தது. அம்மனே கனவில் வந்து தனக்கு திருவிழா நடத்த வேண்டும் என்றும் கூறியதாக வரலாறு கூறுகிறது.
பின் ஊர் திருவிழா அன்று அனைவரும் கொங்கு பகுதி வழக்கப்படி பச்சை மாவு எடுத்து வடக்கு திசையில் சென்றனர். அப்போது அந்த சலவைத் தொழிலாளி பெண், தனது குடும்ப வறுமை காரணமாக பச்சைமாவுக்கு பதில் புளியங்கொட்டையைக் கொண்டு இடித்து அதில் மாவு செய்து தெற்கு நோக்கி கொண்டு சென்றிருந்தாள்.
அந்த புளிமாவுக்காக அம்மனே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திரும்பி காட்சியளித்தது. அது இன்றளவும் அம்மனின் அமைப்பு அப்படியே உள்ளது என்று நம்பப்படுகிறது.
கோயில் சிறப்புகள்:
இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு விபூதி கிடையாது. புற்று மண்தான் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் கோயிலான பண்ணாரி அம்மன் கோயில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப் பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது. இது தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையில் இருக்கும் வனப்பகுதி என்பதால், இரு மாநிலங்களை சேர்ந்த மக்களுக்கும் பிரியமான தெய்வமாக திகழ்கிறாள்.
பக்தர்கள் காடுகளுக்கு போய் மரம் வெட்டி (இதை கரும்பு வெட்டுதல் என்கிறார்கள்) கொண்டு வந்து மலை போல் குவித்து அவற்றை எரித்து 8 அடி நீளம் கொண்ட அக்னி குண்டமாக்கி விடுவார்கள். முதலில் தலைமை பூசாரி இறங்கி நடந்து செல்வார். பின்னர் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவார்கள்.
காலை 4 மணி முதல் மாலை வரை பக்தர்கள் தொடர்ந்து அக்னி குண்டம் இறங்குவது மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி. கடைசியாக ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் பக்தர்கள் குண்டம் இறக்கி நடக்க வைப்பார்கள். இக்கோயிலின் குண்டம் திருவிழா தமிழ்நாட்டில் மிகப்புகழ் பெற்றது.
தமிழ்நாடு தவிர கர்நாடக மாநில மக்களிடையேயும் பெரிய அளவில் புகழ் பெற்ற தலம். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன், தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணலாம்.
தல அமைப்பு:
அம்மனே கனவில் வந்து தனக்கு திருவிழா நடத்த வேண்டும் என்றும் கூறியதாக வரலாறு கூறுகிறது. அதன்பிறகு ஊர் திருவிழா அன்று அனைவரும் கொங்கு பகுதி வழக்கப்படி பச்சை மாவு எடுத்து வடக்கு திசையில் சென்றனர்.
அப்போது அந்த சலவைத் தொழிலாளி பெண், தனது குடும்ப வறுமை காரணமாக பச்சைமாவுக்கு பதில் புளியங்கொட்டையை கொண்டு இடித்து அதில் மாவு செய்து தெற்கு நோக்கி கொண்டு சென்றிருந்தாள். அந்த புளிமாவுக்காக அம்மனே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திரும்பி காட்சியளித்தாள்.
இன்றளவும் அம்மனின் அமைப்பு அப்படியே உள்ளது என்றும் நம்பப்படுகிறது. இக்கோயிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது.இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம்.
செல்லும் வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது.
வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்த கிணறும் உள்ளன. திருவிழா: பண்ணாரி அம்மன் கோயிலில் பங்குனி குண்டம் பெருந்திருவிழா 20 நாள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
கோயில் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்திருக்கும்.
அமைவிடம்:
சத்தியமங்கலம் மைசூர் சாலையில் மேட்டுப்பாளையம் இருப்பதால் போக்குவரத்து வசதி அதிகம் உள்ளது. சத்தியமங்கலத்திலிருந்து பேருந்து மூலம் கோயிலுக்கு செல்லலாம். சத்தியமங்கலத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், ஈரோட்டில் இருந்து 77 கி.மீ. தொலைவிலும், கோவையில் இருந்து 82 கி.மீ. தொலைவிலும் சேலத்தில் இருந்து 170 கி.மீ. தொலைவிலும் மைசூரில் இருந்து 127 கி.மீ. தொலைவிலும் திருப்பூரில் இருந்து 65 கி.மீ. தொலைவிலும் பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |