கண்பார்வை இழந்த சகோதரிக்கு காட்சிக்கொடுத்த முருகப்பெருமான்

By Sakthi Raj Aug 17, 2026 06:22 AM GMT
Report

கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமான் பக்தர்களுடைய துயர் தீர்ப்பதற்கு எந்த காலத்திலும் ஓடி வந்து நிற்பார். அந்த வகையில், பாம்பன் சுவாமிகள் அருளிய பஞ்சாமிர்த வண்ணம் பாடும் போது நமக்கு பல வகையான நன்மைகள் கிடைக்கிறது.

அப்படியாக, முருக பக்தர் ஒருவர் பஞ்சாமிர்த வண்ணத்தை பாடுகின்ற பொழுது முருகப்பெருமான் பார்வை இழந்த ஒரு பெண்ணுக்கு தரிசனம் கொடுத்த அந்த அற்புத நிகழ்வு முருகப்பெருமாள் பக்தர்களுக்காகவே இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.

வாழ்க்கையில் தனிப்பட்ட கடினமான காலங்களிலும் உடல் நல பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு இந்த பாடலை பாடும் பொழுது முருகப்பெருமானால் மன தைரியம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. முருகப் பெருமானை மட்டுமல்ல எந்த தெய்வத்தையும் நாம் முழுமையாக சரண் அடைந்து வழிபாடு செய்ய வேண்டும்.

2026 ஆவணி மாதம் இந்த ஒரு ராசிக்கு ஜாக்பாட் மாதமாக இருக்கப் போகிறது.. எந்த ராசியினர்

2026 ஆவணி மாதம் இந்த ஒரு ராசிக்கு ஜாக்பாட் மாதமாக இருக்கப் போகிறது.. எந்த ராசியினர்

அப்பொழுது தான் நமக்கு தீர்வு உண்டு. மேலும், இந்த பஞ்சாமிர்த வண்ணம் பாடல் போல் செயல்படாமல் பீஜ மந்திரப் போல் செயல்படுகிறது. இதனை நம்பிக்கையுடன் பாடுகின்ற பொழுது நினைத்த காரியங்கள் கைகூடும்.

துன்பங்களில் இருந்து நாம் விடுதலை பெறுகின்றோம். மேலும், முருக பெருமானுடைய அருள் இந்த பஞ்சாமிர்த வண்ண பாடல்களைப் பற்றியும் பல்வேறு விஷயங்களை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.


 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US