சரஸ்வதி பூஜை அன்று மாணவர்கள் சொல்ல வேண்டிய மந்திரங்கள்
வாழ்க்கையில் கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று.அப்படி அந்த கல்விக்கே அதிபதியாக போற்றப்படும் சரஸ்வதி தேவியை கொண்டாடும் வகையில் சரஸ்வதி பூஜை உலகம் எங்கிலும் கொண்டாடப்படுகிறது.
அப்படியாக சரஸ்வதி தேவியின் முழு அருளை பெற நாம் நாளை(11.10.2024)புத்தகம் சில நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்வோம்.அவ்வாறு வழிபாடு செய்யும் பொழுது சரஸ்வதி தேவியின் முக்கியமான மந்திரங்கள் சொல்லி வாழிபாடு செய்ய நம்முடைய நினைவாற்றல் மற்றும் ஞானம் பெருகு கல்வியில் சிறந்து விளங்குவோம்.ஆக நாம் சரஸ்வதி பூஜை அன்று சொல்ல வேண்டிய முக்கியமான ஐந்து மந்திரங்கள் பற்றி பார்ப்போம்.
மாணவர்களுக்கான சரஸ்வதி மந்திரங்கள்
1. "ஓம் ஐம் சரஸ்வத்யை நமஹ "
என்ற சரஸ்வதி மூல மந்திரத்தை காலை, மாலை இரு வேளைகளிலும் 108 முறை சொல்லி வர நன்மை தரும். தினமும் முடியாதவர்கள் புதன்கிழமைகள் மற்றும் சரஸ்வதி பூஜை தினத்தில் மாலையில் விளக்கேற்றி சரஸ்வதி தேவியை மனதார வ வழிபாடு செய்து கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை சொல்லவேண்டும்.
2. " ஓம் ஐம் ஹ்ரீம் க்ளீம் மகா சரஸ்வதி தேவியே நமஹ "
இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். இந்த மந்திரத்தை 108 முறை சொல்வது சிறப்பானதாகும்.
3. "ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே
பிரம்ம பத்னியை ச தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்"
இந்த சரஸ்வதி காயத்ரி மந்திரத்தை, இசை பாட்டு, நடனம் என எந்த கலையை கற்க துவங்குவதற்கு முன்பும் மாணவர்கள் சொல்லி ஆரம்பித்து வந்தால் கலைவாணியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.
4."சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா"
குழந்தைகள் கட்டாயம் தெரிந்து வைத்து இருக்க வேண்டிய முக்கியமான சரஸ்வதி மந்திரங்களில் இது ஒன்று. இந்த மந்திரத்தை தினமும் 21 முறை உச்சரித்து வந்தால் நினைவாற்றல் பெருகும். மாணவர்கள், படிப்பில் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்வதற்கு இந்த மந்திரம் துணை நிற்கும்.
5. " ஓம் வத வத வாக்வாதினி ஸ்வாஹா"
இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வர உணர்ச்சிகளும் மனமும் ஒரு நிலைப்படும்.படிப்பில் அல்லது வேலையில் கவனம் செலுத்த முடியாமல், நினைவை ஒருமுகப்படுத்த முடியாமல் இருப்பவர்கள் இந்த மந்திரத்தை தினமும் 51 முறை உச்சரித்து வரலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |