வீட்டு பூஜை அறையில் பணம் வைக்கும் பழக்கம் இருக்கிறதா?

By Sakthi Raj Apr 02, 2025 12:40 PM GMT
Report

நம்முடைய வீடுகளில் பூஜை அறை என்பது கோயில்களுக்கு சமம். நாம் வெளியில் செல்லும் பொழுது பூஜை அறைகளில் சிலருக்கு பணம் வைக்கும் பழக்கம் வைத்திருப்பார்கள். இவ்வாறு வைப்பது நமக்கு பல விதமான நன்மைகள் கொடுக்கிறது அதை பற்றி பார்ப்போம்.

நாம் பூஜை அறையில் பணம் சேர்த்து வைப்பது நம் வீட்டில் பண புழக்கத்தை அதிகரிக்கும். சிலர் முக்கியமான பண்டிகை பொழுது அவர்கள் குல தெய்வத்தை நினைத்து பூஜை தட்டில் பணம் வைப்பார்கள்.அவ்வாறு சேர்த்து வைத்த பணத்தை சிறது காலம் பிறகு குலதெய்வம் கோயிலில் கொடுத்து விடுவார்கள்.

வீட்டு பூஜை அறையில் பணம் வைக்கும் பழக்கம் இருக்கிறதா? | Benefits Of Keeping Money In Pooja Room

அவ்வாறு செய்வது நமக்கு சிறந்த பலன் கொடுக்கும். இதற்கு ஒரு முக்கிய காரணம், நாம் வெளியில் செல்லும் பொழுது மிகவும் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக குலதெய்வத்தை நினைத்து முன்னோர்கள் தொலை தூரம் செல்லும் முன் 101 அல்லது சில எண்ணிக்கையில் காணிக்கை வைத்து செல்ல வேண்டும் என்றார்கள்.

2027 வரை சனியின் அருளால் கோடீஸ்வர யோகம் பெற போகும் 3 ராசிகள்

2027 வரை சனியின் அருளால் கோடீஸ்வர யோகம் பெற போகும் 3 ராசிகள்

அவ்வாறு குலதெய்வத்திடம் வேண்டுதல் வைத்து கிளம்பும் பொழுது நம்முடைய மனம் பதட்டம் அடையாமல் நிம்மதியாக செல்லும். ஆக, இதை நாம் பின்பற்றும் பொழுது நம்முடைய குலதெய்வத்தை மறக்காமல் இருப்போம் எப்பொழுதும் குலதெய்வம் அருள் நமக்கு கிடைக்கும்.

வீட்டு பூஜை அறையில் பணம் வைக்கும் பழக்கம் இருக்கிறதா? | Benefits Of Keeping Money In Pooja Room

அதோடு நாம் சேர்த்து வைத்த பணம் கோயிலில் சேர்க்க கட்டாயம் வருடம் ஒருமுறையாவது கோயிலுக்கு சென்று வருவோம்.

குலதெய்வம் நம்முடைய குலம் காக்கும் தெய்வம் ஆவார்கள். அவர்களை மறந்து நாம் என்ன காரியம் செய்தாலும் அதில் தடங்கல் தான் உருவாகும். ஆக குலதெய்வத்தை முறையாக வழிபாடு செய்து நாம் அவர்களின் அருளை பெறலாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US