சிவன் கோவில்களில் 15 தீபம் ஏற்றினால் வாழ்க்கையில் பல அதிசயங்கள் நடக்குமாம்
சிவபெருமான் ஆலயங்களில் நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அந்த வகையில், சிவபெருமான் நம்முடைய பாவங்களை அழித்து மோட்சத்தை வழங்குபவர். அவரிடம் சென்று நாம் சரணடைய நம்முடைய கர்ம வினைகள் யாவும் படிப்படியாக குறைத்துவிடும்.
அந்த வகையில் சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று 15 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் வழக்குகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வாழ்கையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் உண்டு.

அதாவது, நாம் சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று 15 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்கின்ற பொழுது பொருளாதார ரீதியாக எல்லா தடைகளும் விலகும். நீண்ட கால வழக்குகளில் இருந்து இவர்கள் விரைவில் விடுபடுவார்கள்.
எதிரிகள் தொலை முற்றிலுமாக விலகும். சட்ட பிரச்சனைகளிலிருந்து இவர்கள் உடனடி தீர்வை பெற முடியும். மன அமைதி கிடைக்கும்.
இவர்களுக்கு மனதில் நம்பிக்கையும் ஆன்மா ரீதியாக ஒரு நல்ல முன்னேற்றமும் உண்டு. சிவபெருமானுடைய பரிபூரண அருளை பெறலாம். இவர்கள் மாதத்தில் பிரதோஷ தினம் அன்று அவர்கள் 15 தீபம் ஏற்று வழிபாடு செய்ய நிச்சயம் உடனடியாக ஒரு நல்ல தீர்வை பெறலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |