இந்த ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்து வந்தால் தீய சக்திகள் உங்களை நெருங்காது
ஒரு மனிதனின் இயல்பான வாழ்க்கையை பாதிக்கக்கூடிய விஷயமாக கண் திருஷ்டி இருக்கிறது. இந்த கண் திருஷ்டியும் ஓர் தீய சக்திகளைப் போல் தான், நம்மை பெரும் அளவில் பாதித்து விடும்.
இதன் விளைவுகளை அறிந்து தான் முன்னோர்கள் சொல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். அதனால், வார வாரம் வீடுகளில் திருஷ்டி கழிப்பதை முறையாக பின்பற்றி வந்தார்கள். இருப்பினும், சிலருக்கு அதையும் கடந்து அந்த கண் திருஷ்டி பாதிப்பானது தாக்கத்தை கொடுத்து விடுகிறது.
அப்படியாக, வீடுகளில் குழந்தைகளுக்கு கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றலினால் பாதிப்புகள் உருவாகாமல் இருக்க ஒரு சில விஷயங்களை பின்பற்றினால் பாதிப்புகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். அதைப் பற்றி பார்ப்போம்.
பரிகாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரமாக சாம்பிராணி தூபம் போடுவது இருக்கிறது. இவை நம்மை எந்த ஒரு தீய சக்திகளும் நெருங்காமல் பார்த்துக் கொள்கிறது. அதோடு, நமக்கு ஏதேனும் செய்வினை பாதிப்புகள் இருந்தாலும் அவை செயல் இழந்து போகச் செய்கிறது.
கலை இழந்த வீடும் தொடர்ந்து சாம்பிராணி தூபம் போட்டு வர லட்சுமி கடாட்சம் நிறைந்து காணப்படும். அப்படியாக, வீடுகளில் தவறாமல் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் மதியம் 12 மணிக்கு சாம்பிராணி தூபம் போட்டு வர வீடுகளை சூழந்த தீய சக்திகள் விலகும்.
மேலும், அந்த காலங்களில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என்று வீட்டில் உள்ளவர்கள் தலைக்கு குளித்தால் தலை முடியை சாம்பிராணி புகைப் போட்டு உலர்த்துவார்கள். இதற்கு பின்னால் மருத்துவ ரீதியாக பெரிய பலன்கள் இருந்தாலும், ஆன்மீக ரீதியாகவும் நிறைய பலன்கள் இருக்கிறது.
நாம் சாம்பிராணி புகைப் போட்டு முடியை உலர்த்தும் பொழுது நம் உடலில் உள்ள தீய ஆற்றல்கள் நம்மை விட்டு விலகி நம் உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைகிறது. அதோடு, இதை தொடர்ந்து நாம் செய்து வர நம் உடலில் நம்மை அறியாமல் மிகப் பெரிய நேர்மறை ஆற்றல் உருவாகி அவை தீய சக்திகளிடம் இருந்து நம்மை காக்கிறது.
இவ்வாறு செய்பவர்களுக்கு கண் திருஷ்டியை கழிக்க வேண்டும் என்று தனி மெனக்கிடல்கள் எடுக்க வேண்டியது இல்லை.
ஆக, சாம்பிராணி தூபம் தானே என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் வீடுகளில் வெள்ளி செவ்வாய் சாம்பிராணி தூபம் போட்டும், சோம்பேறி காணாமல் சாம்பிராணி புகை போட்டும் தலை முடியை உலர்த்தி வந்து பாருங்கள் உங்களிடமும் வீடுகளில் நடக்கும் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை மாற்றத்தை காணலாம்.
மேலும், தீராத கடன் பிரச்சனை, மனக் குழப்பங்கள் இருப்பவர்கள் இதை கட்டாயம் பின்பற்றி வர விரைவில் அவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். ஆனால், இந்த விஷயங்களை ஆஸ்துமா, மூச்சடைப்பு உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது முக்கியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







