ஆடிப்பூரம் 2025: நாளை(28-07-2025) கேட்ட வரம் கிடைக்க பெண்கள் செய்யவேண்டிய வழிபாடு
ஆடி மாதத்தில் வரக்கூடிய பூரம் நட்சத்திர மிகவும் விஷேசமானதாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் பல அம்மன் கோயில்களில் பல விஷேச வழிபாடுகள் நடக்கும். அப்படியாக, நாளை ஆடிப்பூரம் அன்று நாம் செய்யவேண்டிய வழிபாடுகளைப் பற்றி பார்ப்போம்.
உலக மக்களின் இன்னல்களை போக்க ஆடிப்பூரத்தன்று அம்மன் சக்தியாக உருவெடுத்தால் என்று சொல்லப்படுகிறது. மேலும், அன்றைய நாளில் அம்மன் ஆலயங்களில் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைப்பெறும்.
இதில் நீண்ட நாட்களாக குழந்தைக்காக காத்திருக்கும் பெண்கள் அம்பாளுக்கு வளைகாப்பு நடத்த வளையல் வாங்கிக் கொடுத்து வேண்டுதல் வைப்பார்கள். அவ்வாறு அவர்கள் மனம் உருகி வழிபாடும் செய்யும் பொழுது அடுத்த வருடம் அவர்களுக்கு வளைகாப்பு நடத்த அம்மன் வரம் புரிவாள் என்பது நம்பிக்கை.
அதேப்போல், நீண்ட நாட்களாக திருமண தாமத்தை சந்திக்கும் பெண்கள், தங்கள் வாழ்க்கையில் விரைவில் சுப நிகழ்ச்சிகள் நடக்க ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளைகாப்பு மாலை சாற்றி வழிபாடு செய்வார்கள்.
இவ்வாறு அம்மனுக்கு அணிவித்த வளையல்கள் இரண்டு வாங்கி நாமும் கைகளில் அணிந்து கொண்டால் குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படும்.
மேலும், இந்த ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்துவதற்கான புராணக் கதை ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்.
ஆந்திராவை சேர்ந்த வளையல் வியாபாரி சென்னைக்கு எப்பொழுதும் அவரின் வளையல்கள் விற்க வருவதுண்டு. அப்படியாக, ஒரு முறை சென்னைக்கு வளையல் விற்க வந்த பொழுது பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார்.
இவ்வாறு அந்த வளையல் வியாபாரி பெரியப்பாளையம் வரும் பொழுது அவருக்கு மிகவும் களைப்பானது. இனிமேல் ஒரு அடி எடுத்து வைக்கவே முடியாது என்பது போல் மிகவும் சோர்ந்து விட்டார். மிகுந்த களைப்பு என்பதால் வளையல்களை அங்கேயே ஒரு மரத்தடியில் வைத்து விட்டு வியாபாரி சிறிது நேரம் உறங்கிவிட்டார்.
பிறகு, கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். எல்லா பக்கங்களும் தேடினார் கிடைக்கவில்லை. செய்வதறியாது கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்.
அன்றிரவு, அந்த வளையல் வியாபாரியின் கனவில் அம்மன் தோன்றி "நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன். பல யுகங்களாக ஆடியில் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும் என்று கூறி மறைந்தார் அம்பாள். இவ்வாறு ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது.
இருப்பினும் அம்பாளுக்கு வளையல் மாலை சாற்றி வழிபாடு செய்வது மிகுந்த விஷேசம். அதனால், நாளை பெண்கள் ஆடிப்பூரம் அன்று அம்பாள் கோயில்களில் நடக்கும் இந்த வளையல் உற்சவத்தில் கலந்துக் கொண்டு அம்பாளின் பரிபூர்ண அருளைப் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







