பலரும் அறிந்திடாத தஞ்சை பெரிய கோயிலைப் பற்றிய 5 முக்கியமான சுவாரஸ்ய தகவல்கள்
நம் தமிழ்நாட்டின் மிக முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான கோயில்களில் தஞ்சை பெரிய கோயிலும் ஒன்று. இக்கோயில் தமிழ் நாடு மட்டும் அல்லாமல் உலகம் எங்கிலும் மிகவும் புகழ் வாய்ந்தது.
இக்கோயிலை சோழப் பேரரசர் முதலாம் ராஜராஜனால் கி.பி 1003 மற்றும் 1010 க்கு இடையில் உருவாக்கப்பட்ட ஒரு அதிசிய பொக்கிஷம் ஆகும். இந்த கோயிலில் பல பிரம்மாண்டங்களும் வியக்கத்தக்க விஷயங்களும் இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்.
1. தஞ்சை பெரியகோயிலை சுற்றி நாம் நிழல்களை பார்க்கமுடியாது. அதாவது, பெரியகோயிலின் கோபுரம் உயரம் அதிகம் கொண்டபோதிலும், கோயில் தரையில் நாம் கோபுரத்தின் நிழல்களை பார்க்கமுடியாது.
ஒரு சின்ன செடிகூட நிழல் கொடுக்கும் பட்சத்தில் இவ்வளவு பெரிய கோபுரம் நிழல் தராதது பார்வையாளர்களை மிகவும் வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த ஒளியியல் மாயை கோயிலின் கட்டமைப்பின் புத்திசாலித்தனமான வடிவமைப்பால் உண்டாகிறது. அதோடு, இக்கோயிலில் பயன்படுத்தப்பட்ட கற்களின் அமைப்பு ஒரு தனித்துவமான நிழல் உருவாவதைத் தடுப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
2. தஞ்சை பெரியக்கோயிலில் உள்ளே நுழையும் பொழுது பிரமிக்கவைக்கும் மிக பெரிய நந்தி சிலையை காணலாம். இச்சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் கம்பீரமாக காட்சி அளிக்கும் நந்தி சிலை நமக்கு ஒரு வித பிரம்மாண்ட உணர்வை உருவாக்குகிறது.
3. தஞ்சை கோயிலே ஒரு பிரம்மாண்டம் என்றாலும் இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானும் மிகவும் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறார். அதாவது தஞ்சை பெரிய கோயிலில் உள்ள சிவலிங்கம் சுமார் 20 டன் எடை கொண்டது. இந்த சிவலிங்கம் ஒரே கல்லால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய சிவலிங்களில் இதுவும் ஒன்று.
4. தஞ்சை பெரியகோயிலில் நம்முடைய பாரம்பரிய நடனத்தை பறைசாற்றும் வகையில் சுமார் "பரதநாட்டியத்தின் 81 தோரணைகள்" சித்தரிக்கப்பட்டு உள்ளது. இந்த சிற்பங்கள் பார்ப்பதற்கு அழகாய் இருப்பதை காட்டிலும் நம்முடைய பெருமையை தீர்க்கமாக எடுத்து சொல்கிறது.
5. கோயில் சுவர்களில் அலங்கரிக்கப்ட்ட ஓவியங்கள் அனைத்தும் இயற்கை வண்ணங்களால் தீட்டப்பட்டது. அதாவது, பூக்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் இலைகளிலிருந்து பெறப்பட்ட இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் மற்றும் அதனின் வண்ணம் நம்மை இன்னும் இன்னும் வியப்பில் ஆழ்த்துகிறது என்று சொன்னால் மிகையாகாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







