பாவங்கள் விலக செய்யவேண்டிய முக்கியமான பரிகாரம்
கர்மா என்பது நாம் செய்யும் தவறை நாம் சுமந்து கொண்டு செல்வது போல். அதற்குரிய பரிகாரத்தை நாம் கட்டாயம் செய்ய வேண்டும், அல்லது காலம் நம்மை நமக்கான பரிகாரத்தை செய்ய வைக்கும்.
அப்படியாக முற்பிறவியால் அனுபவிக்கும் துன்பமாக இருந்தாலும் சரி, இப்பிறவிகளில் தெரியாமல் செய்த துன்பத்தினால் அனுபவிக்கும் கஷ்டங்களாக இருந்தாலும் சரி நாம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான பரிகாரம் கோயில்களில் நடக்கும் உழவாரப் பணிகளில் நாம் பங்கு கொள்வது.
ஒவ்வொரு கோவில்களிலும் இந்த உழவாரப் பணியானது நடைபெறும். இதில் பல பக்தர்கள் இந்த பணியில் ஈடுபாடு செலுத்துவார்கள். அதாவது நாம் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வதற்கும் மேலான ஒரு சிறந்த வழிபாடு இந்த உழவாரப் பணியாகும்.
உழவாரப் பணி என்பது கோவில்களை சுத்தம் செய்வது ஆகும். பக்தர்கள் போடும் குப்பைகளை எடுத்து அகற்றுவது, இறைவனின் திருநாமத்தை சொல்லி கோயில் தூண்களில் பக்தர்களால் வைக்கப்படும் திருநீறையும் குங்குமத்தையும் சுத்தம் செய்வது, ஆலயங்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகளை அழுக்குகளை நீக்குவது, சுவாமிக்கு சாற்றப்பட்ட ஆடையை துவைப்பது கோவில்களில் உள்ள விளக்குகளை சுத்தம் செய்வது, கோயில் கோபுரங்களில் முளைத்திருக்கும் செடி கொடிகளை அகற்றுவது, சிவாச்சாரியார்களின் அனுமதி பெற்று திருக்கோயிலின் கொடிமரம் உற்சவ மூர்த்திகளை இயற்கை மூலிகை கொண்டு தூய்மைபடுத்துவது, போன்று கோவில்களை சுத்தம் செய்வது தான் உழவாரப்பணியாகும்.
இந்த பணியை நாம் செய்வதின் வழியாக நம் உடலும் மனமும் தூய்மை பெறுவதோடு நாம் செய்த பாவங்களும் கரைந்துப்போகிறது. ஆதலால் உங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் கோவில் அல்லது ஏதேனும் கோயில்களில் உழவாரப்பணி நடக்கிறது என்று கேள்விப்பட்டால் கட்டாயம் அதில் கலந்து கொள்ளுங்கள்.
ஒரு நாள் உழவாரப் பணி செய்து வீடு திரும்பும் பொழுது மனம் அவ்வளவு தூய்மை அடைவதை நாம் காணலாம். இறைவனைத் தவிர்த்து இறுதி இடம் இந்த உலகில் உண்டோ என்று கேட்டால் நிச்சயம் இல்லை.
ஆக அவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் நாம் உழவாரப்பணி செய்து அவருடைய அருளைப் பெற நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும். அதோடு இவ்வாறான பணிகளில் நாம் ஈடுபடும் பொழுது நம்முடைய கர்ம வினையும் குறையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







