சனிக்கிழமைகளில் நாம் கருப்பு நிற ஆடை அணிவதால் கிடைக்கும் நன்மைகள்

By Sakthi Raj Jul 03, 2025 11:01 AM GMT
Report

  நம்முடைய இந்து மதத்தில் சனிக்கிழமைகளில் நாம் கருப்பு நிற ஆடை அணிந்தால் நமக்கு நல்ல மாற்றங்கள் நடப்பதாக சொல்கிறார்கள். அப்படியாக, நாம் ஏன் சனிக்கிழமைகளில் கருப்பு நிற ஆடையை அணியவேண்டும்? அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றிப் பார்ப்போம்.

சனிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கு உகந்த நாளாகும். இவர்கள் நீதி கடவுளாக பார்க்கப்படுகிறார். அதாவது மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களுக்கு அவர் சரியான பாடம் வழங்கக்கூடியவர்.

அதனால், பலரும் சனி திசை காலங்களில் மிகவும் துன்பப்படுவது உண்டு. அவர்கள் சனியின் தாக்கம் குறைய சனிக்கிழமைகளில் சனி பகவான் ஆலயம் சென்று வழிபாடு செய்து சனியின் தாக்கம் குறைய பிரார்த்தனை செய்வார்கள்.

சனிக்கிழமைகளில் நாம் கருப்பு நிற ஆடை அணிவதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits Of Wearing Black Dress On Saturday Tamil

அப்படியாக, கூடுதலாக நாம் சனி பகவானின் அருளைப்பெற நாம் சனிக்கிழமை அன்று கருப்பு நிற ஆடை அணிந்தால் நன்மைகள் நடக்கும் என்கிறார்கள். அதாவது சனிக்கிழமைகளில் நாம் கருப்பு நிற ஆடையை அணியும் பொழுது நம்மை சுற்றி உள்ள எதிர்மறை ஆற்றல் விலகும் என்கிறார்கள்.

மேலும், நம்மை சூழ்ந்த கண் திருஷ்டி போன்ற தீய பார்வைகள் விலகி நன்மை நடப்பதாக சொல்கிறார்கள்.

ஜோதிடம்: 12 ராசிகளுக்கும் துணையாக நிற்கும் கடவுள்கள் யார் தெரியுமா?

ஜோதிடம்: 12 ராசிகளுக்கும் துணையாக நிற்கும் கடவுள்கள் யார் தெரியுமா?

மேலும், நாம் சனிக்கிழமை கருப்பு நிற உடை அணியும் பொழுது சனி பகவானின் அருளால் நம்முடைய உழைப்பும் வாழ்க்கையில் முன்னேற்றமும் அதிகரிக்கும் என்கிறார்கள். குறிப்பாக, சனிக்கிழமைகளில் நாம் கருப்பு நிற ஆடை அணியும் பொழுது நம்முடைய ஆற்றலை சம நிலை செய்கிறது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US