கிரக தோஷங்கள் விலக செய்யவேண்டிய முக்கியமான பரிகாரம்
ஜோதிடத்தில் 9 கிரகங்கள் உள்ளது. இவர்களுடைய இட மாற்றத்தால் நம் வாழ்க்கையில் அடிக்கடி நிறைய மாறுதல்களை சந்தித்து வருகின்றோம். அப்படியாக, சிலருக்கு இந்த கிரகத்தால் சில தோஷங்கள் ஏற்பட்டு இருக்கும்.
அவ்வாறு தோஷம் கொண்டவர்கள் வாழ்க்கையில் நிறைய தடைகள் சந்திப்பதை நாம் பார்க்கலாம். அவ்வாறான வேளையில் அவர்களுக்கு கைகொடுப்பது இறைவன் மட்டுமே. அப்படியாக, கிரக தோஷங்களால் துன்பப்படுபவர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றிப்பார்ப்போம்.
எவ்வளவு பெரிய இன்னல்கள் கொண்டு இருந்தாலும் அவை விலக, கோயிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் அதற்கான நல்ல தீர்வை நாம் பெறமுடியும். தீபத்திற்கு அவ்வளவு சக்திகள் உண்டு. அந்த வகையில் நீங்கள் எந்த கிரகத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களோ அந்த கிரகத்திற்கு ஏற்ப ஏற்றவேண்டிய தீபங்கள் எத்தனை என்று பார்ப்போம்.
1. ராகு தோஷம் - 21 தீபங்கள்
2. சனி தோஷம் - 9 தீபங்கள்
3. குரு தோஷம் - 33 தீபங்கள்
4. துர்க்கைக்கு - 9 தீபங்கள்
5. ஈஸ்வரனுக்கு - 11 தீபங்கள்
6. திருமண தோஷம் - 21 தீபங்கள்
7. புத்திர தோஷம் - 51 தீபங்கள்
8. சர்ப்ப தோஷம் - 48 தீபங்கள்
9. காலசர்ப்ப தோஷம்- 21 தீபங்கள்
10. களத்திர தோஷம் -108 தீபங்கள்
இவ்வாறு தங்கள் வாழ்க்கையில் யாருக்கு என்ன தோஷம் உள்ளதோ அவர்கள் மனதார என்னுடைய கர்மவினைகள் விலகி எனக்கு விரைவில் நல்ல மாற்றம் நடக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்து விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் விரைவில் சிறந்த மாற்றத்தை அவர்கள் காணலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |