எவ்வளவு உழைத்தாலும் கையில் பணம் தங்காத 4 ராசிகள் யார் தெரியுமா?
நாம் உழைப்பது அன்றாட தேவைக்கு என்றாலும் கட்டாயம் எதிர்காலத்திற்கு என்று நாம் கொஞ்சம் பணம் சேமித்து வைப்பது என்பது அவசியம். அப்பொழுது தான் அவசரமான காலகட்டத்தில் நாம் யார் உதவியும் நாடி கஷ்டப்பட வேண்டாம். இருந்தாலும் ஒரு சிலருக்கு எவ்வளவு உழைத்தாலும் கையில் பணம் தங்குவதே இல்லை.
அடுத்து அடுத்து ஏதேனும் செலவுகளை சந்தித்துக் கொண்டு இருப்பார்கள் அல்லது செலவழித்துக் கொண்டு இருப்பார்கள். அப்படியாக, எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்காத ராசிகள் யார் என்று பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசியினர் நிகழ் காலத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களுக்கு ஏதேனும் பொருள் பிடித்து விட்டது என்றால் எதைப் பற்றியும் யோசிக்காமல் வாங்கி விடுவார்கள். நாளை என்பதை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருப்பதால் அதிக அளவில் செலவு செய்து விடுவார்கள்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு தொழில் நுட்ப பொருட்கள் மீது அதிக அளவில் விருப்பம் இருக்கும். அதோடு இவர்கள் தங்களை எப்பொழுதும் அழகுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள். விளைவாக ஆடம்பர செலவு அதிகம் செய்வார்கள். அதனால் இவர்கள் கையில் பணம் தங்குவது சற்று கடினமாக இருக்கும்.
சிம்மம்:
இவர்கள் சமுதாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆதலால் பிறர் முன்பு தன்னை அழகு படுத்திக் கொள்ள அதிக அளவில் செலவு செய்வார்கள். சொகுசு வாகனம், நகை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சமயங்களில் வங்கியில் கடன் வாங்கியாவது அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள்.
துலாம்:
துலாம் ராசியினர் அவர்கள் மன அழுத்தம் குறைக்க அதிக அளவில் செலவு செய்வார்கள். புதிய பொருட்கள் வாங்குவது அவர்களுக்கு அதிக அளவில் மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதால் மன தடுமாற்றம் அடைந்து சேமிப்பை கரைத்து விடுவார்கள். பிறகு அதை எண்ணி கவலை அடைவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |