இந்த 8 தெய்வீக ரகசியங்கள் தெரிந்திருந்தால் பல சிக்கல்களில் இருந்து விலகலாம்
1. இந்த உலக்தில் தீய சக்திகள் நடமாட்டம் என்பது உண்மை தான். அந்த தீய சக்திகளால் பாதிக்கப்படும் பொழுது நாம் விநாயகப்பெருமானுக்கு சுண்டைக்காய் மலர் வைத்து வழிபட்டால் அவை நம்மை விட்டு விலகி விடும்.
2. நாம் ஒரு காரியத்திற்காக வெளியே செல்லும் பொழுது எதிரில் இறந்தவர்களின் உடலை தூக்கி செல்வது போல் பார்த்தாலும், அல்லது இறந்தவர்களின் உடல் எரிக்கப்படுவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில நாணயங்களை பூமியில் போட்டு விட்டு செல்ல அந்த ஆத்மாவினால் எதிர் மறை விளைவுகள் ஏற்படாமல் இருக்கும்.
3. நாம் தினமும் வேலைக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது நீர் நிரம்பிய பாத்திரமோ அல்லது நீர் நிரம்பிய பக்கெட் தொட்டி குளம் பார்த்து சென்றால் செல்கின்ற காரியம் சுபமாய் முடியும்.
4. சிலருக்கு அக்கம்பக்கத்தினரால் தொல்லைகளும் தொந்தரவும் உண்டாகும், அவர்கள் தினமும் வீட்டு முன் பஞ்சதீபம் ஏற்றி வேண்டி வந்தால் தொல்லைகள் விலகும்.
5. எதிரிகள் தொல்லையால் மன உளைச்சல் அதிகமானால் வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர எதிரிகளின் தாக்கம் முற்றிலுமாக குறைந்து விடும்.
6. தானத்தில் சிறந்த தானம் பசுவானது பால் கறக்கும் நிலையில் இருக்கும் பொழுது தானம் செய்வது தான்.
7. வீட்டில் பிறந்த முதல் ஆண் குழந்தையின் அரைஞாண் கயிற்றை பணப்பெட்டியில் வைக்க செல்வ வளம் சேரும்.
8. நம்மை பிடிக்காதவர்களால் நமக்கு வசிய கட்டு ,தீய மைகள் , தீய வசிய ஏவல் போன்ற சக்திகள் செய்யப்பட்டு இருந்தால் நாம் மழை நீரில் அல்லது பசும்பாலில்(கறவை சூடாக) தலையில் நனைந்து விட்டால் அந்த சக்திகள் செயல் இழந்து போகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |