குரு பகவானை வியாழக்கிழமை இப்படி வழிபாடு செய்தால் நினைத்தது சாதிக்கலாம்

By Sakthi Raj Sep 03, 2026 07:45 AM GMT
Report

ஜோதிடத்தில் குரு பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். குருவை நாம் வழிபாடு செய்கின்ற பொழுது எப்பேர்பட்ட துயரங்களும் எப்பேர்பட்ட தோஷங்களும் விலகும். அந்த வகையில், நவகிரகங்களில் சுப கிரகமாக இருக்கக்கூடியவர் குரு பகவான்.

அதனால் தான் "குரு பார்க்க கோடி நன்மை" என்று சொல்லி இருக்கிறார்கள். ஜாதகத்தில் எந்த ஒரு கட்டத்தில் தோஷமான அல்லது தீய பலன்களை கொடுக்கக்கூடிய அசுப கிரகம் இருந்தாலும் அந்த இடத்தில் குரு பகவானுடைய பார்வை பட அந்த கிரகங்களினுடைய தீய தாக்கம் குறையும்.

2026: செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி.. தொட்டதெல்லாம் வெற்றி பெறும் ராசிகள் யார்?

2026: செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி.. தொட்டதெல்லாம் வெற்றி பெறும் ராசிகள் யார்?

2026 கிருஷ்ண ஜெயந்தி: நாளை கண்ணனை அழைத்து வழிபாடும் செய்யும் முறை

2026 கிருஷ்ண ஜெயந்தி: நாளை கண்ணனை அழைத்து வழிபாடும் செய்யும் முறை

இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட குருபகவானை நாம் சரியாக முறையாக வழிபாடு செய்கின்ற பொழுது நம் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும். குரு பகவானுக்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகிய மூன்றையும் கலந்து விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்.

குரு பகவானை வியாழக்கிழமை இப்படி வழிபாடு செய்தால் நினைத்தது சாதிக்கலாம் | Benefits Of Worshiping Guru Bagavan On Thursday

குரு பகவானுக்கு ஏற்றக்கூடிய விளக்குகளின் எண்ணிக்கை 11 அல்லது 21 ஆக இருப்பது நமக்கு சிறந்த பலன்களை கொடுக்கும். அதோடு, குரு பகவானுக்கு உரிய குரு காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்வதும் நமக்கு உயர்ந்த நன்மைகளை பெற்றுக் கொடுக்கும்.

"ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே க்ருணி அஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரசோதயாத்"

இந்த மந்திரத்தை தினமும் 36 முறை குருபகவானை மனதார நினைத்து வழிபாடு செய்கின்ற பொழுது தடை, தோஷங்கள் யாவும் விலகி நல்ல ஞானம் பொருளாதார, முன்னேற்றம், சம்பள உயர்வு, நினைத்த வேலை, குழந்தை பாக்கியம் வியாபாரத்தில் அதிர்ஷ்டம் உயர்வு ஆகியவற்றை நாம் பெறலாம்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US