6 தேதி பிறந்தவர்கள் சாணக்கியர் போல் இருப்பார்களா? நியூமராலஜி சொல்லும் விளக்கம்
பொதுவாக மற்றவர்களுக்கு பயனுள்ள நல்ல வழிகாட்டுதல்களை வழங்கி அவர்களுக்கு அறிவுரை கூறும் திறன் அனைவருக்கும் இருக்காது.
மாறாக ஒருவர் கூறும் ஆலோசனைகளை மற்றொருவர் காது கொடுத்து கேட்க வேண்டும். அப்படி ஒருவர் கேட்க வைத்து விட்டால் அவர் தான் ஒரு சிறந்த தலைவர்.
இந்த குணம் அனைவரிடமும் இருக்கலாம் ஆனாலும் எண் கணிதத்தின்படி சில தேதிகளில் பிறந்தவர்கள் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் திறன் இயல்பாகவே இருக்கும்.
அந்த வகையில் 6 ஆம் திகதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த திறன் அதிகம் இருப்பதாக எண்கணிதம் கூறுகிறது.
இது போன்று வேறு என்னென்ன திகதிகளில் பிறந்தவர்கள் ஆலோசகர்களாக இருப்பார்கள் என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. 3 ஆம் திகதி பிறந்தவர்கள்
ஒவ்வொரு மாதத்திலும் 3 ஆம் திகதி பிறந்தவர்கள் சிறந்த தகவல் தொடர்பு திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் பேச்சு வசீகரமுடையதாக இருக்கும். நல்ல விடயங்கள் பற்றி அதிகமாக பேசுவார்கள். அத்துடன் ஆக்கப்பூர்வமான சிந்தனை இருப்பதால் சிக்கலான பிரச்சினைகளை கூட இலகுவாக தீர்த்துக் கொள்வார்கள்.
2. 8 ஆம் திகதி பிறந்தவர்கள்
8 ஆம் திகதி பிறந்தவர்கள் எப்போதும் பொறுப்பு, உறுதி கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் வலுவான திட்டம் இருக்கும். சாமர்த்தியமான வார்த்தை பிரயோகத்தால் நிதி, வணிகம் என்பவற்றில் தலைமைத்துவம் கொண்டவர்களாக இருப்பார்கள். அத்துடன் நம்பிக்கையானவர்களுக்கு சிறந்த ஆலோசகர்களாக இருப்பார்கள்.
3. 12 ஆம் திகதி பிறந்தவர்கள்
12 மாதத்திலும் 12 ஆம் திகதி பிறந்தவர்கள் கருணை மற்றும் பச்சாதாபம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஆசிரியர்களாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயற்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் வழிகாட்டல்கள் எப்போதும் நன்மைமிக்கவையாக இருக்கும்.
12 ஆம் தேதி பிறந்தவர்கள் பெரும்பாலும் ஆலோசனை, சிகிச்சை மற்றும் ஆன்மீகம் போன்ற துறைகளில் பணியாற்றுவார்கள். நேர்மறையான எண்ணம் இருப்பதால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் சிறந்து விளங்கும்.
4. 26 ஆம் திகதி பிறந்தவர்கள்
இவர்கள் எண் 8ல் பிறந்தவர்களாக இருப்பார்கள். வலுவான உள்ளுணர்வால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கூட இவர்களை அடையாளப்படுத்தலாம். ஆழமான புரிதல் இருக்கும். தொழில், உறவு என அனைத்திலும் பிரித்து பார்த்து புரிந்து கொள்வார்கள்.
அத்துடன் புத்திசாலியாகவும் இருப்பார்கள். குழப்பமான நிலையிலும் சமர்த்தியமாக முடிவுகளை எடுப்பார்கள். அனைவராலும் அதிகமாக பாராட்டப்படுவார்கள். இவர்களின் செயற்பாடுகள் எப்போதும் தனித்துவமாக இருக்கும்.
மற்றவர்களுக்கு இடையூறு செய்ய விரும்பமாட்டார்கள். இவர்கள் போல் இந்த உலகில் பாசமானவர்கள் யாரும் இருக்க முடியாது. நம்பியவர்களுக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.