மருதாணியை இப்படி வைத்தால் செல்வம் பெருகும்
வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளின் போது பெண்கள் கையில் மருதாணி வைப்பது வழக்கம்.
ஆன்மிகத்தின்படி, லட்சுமி தேவிக்கு விருப்பமான, மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்று மருதாணி.
அந்தவகையில், மருதாணி எந்த நாளில், எந்த நேரத்தின் வைத்தால் செல்வம் பெருகிக் கொண்டே என்பதை படி பார்க்கலாம்.
எப்பொழுது வைக்க வேண்டும்?
அதேபோல், வியாழன், வெள்ளி, ஞாயிறு ஆகியவை மருதாணி வைப்பதற்கு மிகவும் ஏற்ற நாட்களாகும். அதிலும் ஞாயிற்றுகிழமையில் மருதாணி வைப்பது மிகவம் சிறப்பானது.
திதிகளில் பஞ்சமி, தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய திதிகள் மருதாணி வைக்க ஏற்ற திதிகளாகும்.
அதேபோல் நட்சத்திரங்களில் பரணி, பூரம், பூராடம் ஆகியவை மருதாணி வைப்பதற்கு ஏற்ற நட்சத்திரங்கள் ஆகும்.
அந்தவகையில், மருதாணி வைப்பவர்கள் வடக்கு திசை பார்த்தும், மருதாணி வைத்துக் கொள்பவர்கள் கிழக்கு திசை நோக்கியும் அமர்ந்து வைக்க வேண்டும்.
எப்பொழுது வைக்க கூடாது?
ராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் மருதாணி வைக்கக் கூடாது.
சந்திராஷ்ட காலங்களில் மருதாணி வைப்பதை தவிர்க்க வேண்டும்.
அவரவருக்கு சந்திராஷ்டமம் நடக்கும் போது மட்டுமின்றி, பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களின் சந்திராஷ்டமம் நடக்கும் காலங்களிலும் மருதாணி வைக்கக் கூடாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |