இந்த 2 ராசிகள் திருமணம் செய்து கொண்டால் ஜோடி பொருத்தம் அமோகமாக இருக்குமாம்
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்று பலரும் சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். அப்படியாக திருமணம் நாம் செய்யும் பொழுது இந்து மதத்தில் ஜோதிட ரீதியாக ஜாதகம் பார்த்தும் திருமணம் பொருத்தம் இருக்கின்றதா என்று எல்லாம் ஆலோசித்து தான் திருமணம் செய்வார்கள்.
காரணம் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு ராசி பொருத்தம் என்று உள்ளது. அந்த வகையில் எந்த ராசியினர் எந்த ராசியை திருமணம் செய்து கொண்டால் அவர்கள் வாழ்க்கை அமோகமாக இருக்கும் என்று பார்ப்போம்.
மேஷம் மற்றும் மிதுனம்:
இவர்கள் இருவரும் திருமணம் செய்யும் பொழுது இவர்களுடைய வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக அமைகிறது. காரணம் இருவருமே எதையும் எதார்த்தமாக கொண்டு போகக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். ஆக இவர்கள் இருவரும் சேர்ந்து திருமண வாழ்க்கை அமைக்கும் பொழுது இவர்கள் இருவரும் எந்த ஒரு விஷயத்தையும் பெரிது படுத்தாமல் சுகமான வாழ்க்கை வாழ்வார்கள்.
ரிஷபம் மற்றும் கடகம்:
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் பொழுது இவர்கள் இருவருமே அதிக பயணம் செய்வதில் ஆர்வம் உடையவர்கள். ஆதலால் இவர்கள் இருவருமே சேர்ந்து நிறைய பயணங்கள் செய்து அவர்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். அது மட்டுமில்லாமல் இருவரும் படிய கனவுகளை மெய் ஆக்குவதற்கான உதவிகளையும் செய்து கொள்வார்கள்.
சிம்மம் மற்றும் தனுசு:
இந்த இரண்டு ராசியினர் திருமணம் செய்து கொள்ளும் பொழுது அவர்கள் இருவரும் தொழில ரீதியாக அவர்கள் அறிவைக் கொண்டு நல்ல வளர்ச்சி அடைவார்கள். இருவருமே ஞானத்தால் சிறந்து விளங்க கூடியவர்கள். ஆதலால் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து அவர்கள் திருமண வாழ்க்கையை சிறப்பாக வாழ்வார்கள்.
துலாம் மற்றும் கும்பம்:
இந்த இரண்டு ராசியினர் திருமணம் செய்து கொள்ளும் பொழுது இவர்கள் இருவரும் வாழ்க்கையை சமமாக பங்கு கொண்டு வாழ்வார்கள். அதாவது அன்பும் ஆளுமை திறன் என்று அனைத்தையும் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் சமநிலையில் விட்டுக்கொடுத்து மிக ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை வாழ்வதில் இந்த இரண்டு ராசியினரும் மிகச் சிறப்பானவர்களாக இருப்பார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







