பிறர் விமர்சனங்களைக் கடந்து மன அமைதியுடன் வாழ பகவத் கீதை சொல்லும் ரகசியம்

By Sakthi Raj Nov 27, 2026 09:08 AM GMT
Report

வாழ்க்கையில் நாம் எவ்வளவு நல்லது செய்து வாழ்ந்தாலும் நம்மை குறை சொல்வதற்கு என்று ஒரு கூட்டமே எப்பொழுதும் இருந்துக் கொண்டே இருக்கும். அதாவது நாம் செய்யக்கூடிய செயல்களை ஒருவர் விமர்சிக்கலாம். இன்னும் ஒரு சிலர் நாம் நன்றாக இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் நம்முடைய அமைதியை குலைக்கும் வகையில் நடந்து கொள்ளலாம்.

இதனால் ஒருவருக்கு மன உளைச்சலும், தேவை இல்லாத கவலைகளுக்கும் ஆளாக நேர்கிறது. இப்படியாக ஒவ்வொருவரும் நம்மைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே நாம் சிந்தித்து கொண்டு இருந்தால் நம்முடைய வாழ்க்கையை எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் நிம்மதியாக வாழவே முடியாது.

பிறர் விமர்சனங்களைக் கடந்து மன அமைதியுடன் வாழ பகவத் கீதை சொல்லும் ரகசியம் | Bhagavad Gita Chapter 12 Life Lessons Mental Peace

பகவத் கீதை: காலையில் எழுந்தவுடன் இதை மட்டும் செய்யுங்கள்! வெற்றிக்கான ரகசியம் இதோ

பகவத் கீதை: காலையில் எழுந்தவுடன் இதை மட்டும் செய்யுங்கள்! வெற்றிக்கான ரகசியம் இதோ

இதைத்தான் பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில் 12 வது அத்தியாயத்தில் 15வது ஸ்லோகத்தில் ஒரு சிறந்த மனிதருடைய குணத்தை நமக்கு எடுத்துரைக்கிறார்.

பகவத் கீதை – அத்தியாயம் 12, ஸ்லோகம் 15

"யஸ்மாந்நோத்விஜதே லோகோ லோகாந்நோத்விஜதே ச
யஹஹர்ஷாமர்ஷபயோத்வேகைர்முக்தோ யஹ ஸ ச மே ப்ரியஹ"

இதன் பொருள்:

அதாவது யாரால் மற்றொருவருக்கு எந்த ஒரு துன்பமும் சங்கடமும் ஏற்படுவதில்லையோ, அதை போல், மற்றவர்களால் யாருடைய மனம் எளிதில் பாதிக்கப்படாமல் இருக்கிறதோ, எவர் ஒருவர் மகிழ்ச்சி, கோபம், பயம், மனக்கலக்கம் போன்றவற்றை கடந்து வாழ்கிறார்களோ அவர்களே எனக்கு பிரியமானவர் என்று பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்.

இந்த ஸ்லோகம் நமக்கு உணர்த்துவது என்ன? இந்த உலகத்தில் ஒருவர் நம்மைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி எப்பொழுதும் நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது. ஆனால், அவர்கள் பேசும் வார்த்தைகளுக்கு நாம் எப்படி எதிர்வினையாற்றுகின்றோம் என்பதை நிச்சயமாக நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

பிறர் விமர்சனங்களைக் கடந்து மன அமைதியுடன் வாழ பகவத் கீதை சொல்லும் ரகசியம் | Bhagavad Gita Chapter 12 Life Lessons Mental Peace

கூட்டத்தில் இருந்தாலும் தனிமை உணர்கிறீர்களா? ஆன்மிகக் காரணம் என்ன தெரியுமா??

கூட்டத்தில் இருந்தாலும் தனிமை உணர்கிறீர்களா? ஆன்மிகக் காரணம் என்ன தெரியுமா??

உதாரணமாக யாராவது ஒருவர் நம்மை குறை சொன்னால் அதில் உண்மையான ஒரு கருத்து இருக்குமாயின் அதனை நாம் ஏற்றுக் கொண்டு திருத்திக் கொள்ளலாம். தேவையில்லாத விமர்சனமாக இருந்தால் அதற்காக நம்முடைய மன அமைதியை அந்த நேரத்தில் இழக்க வேண்டியதில்லை.

அதே நேரத்தில், நம்முடைய செயல்களும் வார்த்தைகளும் எந்த ஒரு இடத்திலும் மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்கும் படியாக இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இன்றைய சிந்தனை: ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் மற்றவர்களுடைய எண்ணங்களை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது.

ஆனால், நம்முடைய மன அமைதியையும், செயல்களையும் நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆக, பிறரை காயப்படுத்தாமல் வாழ்வோம். பிறரின் விமர்சனங்களுக்காக நம்முடைய மகிழ்ச்சியை இழந்து விடாமல் மன அமைதியை காப்போம். 

குறிப்பு:

இது ஆன்மீக மற்றும் பொதுவான தகவல் நோக்கத்திற்கான உள்ளடக்கம் மட்டுமே. தொடர்ந்து மனச்சோர்வு, பதட்டம், தூக்கமின்மை, அல்லது மனநல பிரச்சனைகள் இருந்தால் மன நல மருத்துவரை அணுகுவது நல்லது.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US