நடக்காத காரியத்தையும் நடத்தி காட்டும் பைரவரின் பஞ்சதீப வழிபாடு
வெற்றிக்குரிய அதிபதி பைரவர்.எவர் ஒருவர் வாழ்க்கையில் பைரவர் வழிபாட்டை மேற்கொள்கிறார்களோ அவர்களுக்கு பயம் தோல்வி என்ற எந்த ஒரு பலவீனமும் வருவது இல்லை.அப்படியாக சிவபெருமானுடைய 64 வடிவங்களில் ஒருவராக விளங்கும் இந்த பைரவர்.
இவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து வேலைகளையும் செய்கிறார்.எனவே இவருக்கு ஐந்து தீபங்கள் வைத்து விளக்கேற்றி வழிபடும் பொழுது,வாழ்க்கையில் தீராத துன்பம்,நடத்தி காட்ட முடியாது என்று நினைத்த காரியம் எல்லாம் சுலபகமாக நடத்தி காட்டுவார் என்பது நம்பிக்கை.
ஆக இத்தனை சக்தி வாய்ந்த பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்தல் சகல நன்மைகளும் கிடைக்கும்.நாம் இப்பொழுது தேய்பிறை அஷ்டமியில் பைரவ வழிபாட்டை எப்படி மேற்கொள்ளுவது என்று பார்ப்போம்.
பைரவருக்கு மிகவும் உகந்த தினம் தேய்பிறை அஷ்டமி ஆகும். பௌர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் எல்லா நன்மைகளும் அருளிச்செய்வார். கோவிலுக்கு சென்று பைரவரை தரிசிக்க முடியாவிட்டாலும் வீட்டிலிருந்தே பைரவரை வழிபடலாம்.
அஷ்டமி திதியில் வீடு பூஜை அறையில் விளக்கு ஏற்றி மனதில் பைரவரை நினைத்து, பைரவர் மந்திரத்தை உச்சரித்து வழிபட மேன்மை உண்டாகும்.
காலபைரவர் பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்வதால் இவருக்கு கோவிலில் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி, பஞ்ச விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்வது வாழ்க்கையில் ஏற்றத்தை கொடுக்கும்.அதாவது 5 அகல் விளக்குகளை எடுத்து கொண்டு அதில் ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு வகையான எண்ணெய் ஊற்றி தனித்தனியே தீபத்தை ஏற்ற வேண்டும்.
நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்கள் தான் பஞ்ச தீப எண்ணெய்கள் என்று குறிப்பிடப்படுகிறது.ஒவ்வொரு விளக்கிலும் இந்த ஒவ்வொரு எண்ணெய்களை ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றி, பைரவருடைய மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் எல்லா விதமான பிரச்சனைகளும் தீரும்.
இந்த நாளில் மிகவும் சக்தி வாய்ந்த பைரவாஷ்டகம் சொல்லி பிராத்தனை செய்வது மனதிலும் நம்மை சுற்றிலும் நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். மேலும் குடும்பத்தில் இருக்கும் துஷ்ட சக்திகள் அத்தனையும் நீங்க செய்து எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று தரும்.
நினைத்த காரியத்தை அடைய பைரவ வழிபாடு மிகவும் கைகொடுக்கும்.பிள்ளைகள் படிப்பில் முன்னேற்றம்,தொழில் வளர்ச்சி,எதிரிகள் தொல்லை,இவற்றில் இருந்து நம்மை காப்பாற்றி வாழ்க்கையில் ஒரு மிக பெரிய இடத்திற்கு செல்ல கட்டாயம் தேய்பிறை அஷ்டமியில் பைரவ வழிபாடு செய்வது மிகுந்த பலன்களை தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |