திருப்பதியில் பாஷ்யகார உற்சவம் தொடங்கியது
By Fathima
திருமலை ஸ்ரீவாரி கோயிலில் பாஷ்யகார உற்சவம் இன்று தொடங்கி 19 நாட்களுக்கு நடைபெறுகிறது.
விசிஷ்டாத்வைத கோட்பாட்டின் அடிப்படையில் ஸ்ரீபாஷ்யம் என்ற விளக்கத்தை ராமானுஜர் எழுதினார், அதனால் பாஷ்யகாரர் என்று அழைக்கப்படுகிறார்.
இவர் பிறந்த சித்திரை மாதம் ஆருத்ரா நட்சத்திரத்தை (திருவாதிரை) முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி திருமலையில் பாஷ்யகார உற்சவம் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான பாஷ்யகார உற்சவம் இன்று தொடங்கி, வரும் 21ம் திகதி வரை மொத்தம் 19 நாட்களுக்கு நடைபெறும்.
முக்கிய நிகழ்வாக ராமானுஜர் பிறந்த ஆருத்ரா நட்சத்திர நாளான 12ம் திகதி பாஷ்யகார சாத்துமோரா நடைபெறும்.