இந்த 4 தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் கொடுத்து வச்சவர்களாம்- உங்கள் தேதி உள்ளதா?
மனிதனாக பிறந்த எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதேனும் சாதனை செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், சிலருக்கு என்னதான் உழைத்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பது இல்லை. ஒரு சிலருக்கு சாதாரணமாக ஒரு விஷயத்தை செய்தாலும் அவர்களுக்கு பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்கும்.
இதற்கு சமயங்களில் அந்த நபரின் நல்ல நேரமும் ஒரு காரணம் என்று சொல்லலாம். அப்படியாக, எண் கணிதத்தில் ஒரு சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே வாழ்க்கை முழுவதும் அதிர்ஷ்டம் உடன்நின்று அவர்களுக்கு வளர்ச்சியை கொடுக்கும் என்று சொல்கிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.
3ஆம் தேதி:
எண் கணித்தபடி 12 மாதங்களிலும் 3 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு எதை தொட்டாலும் வெற்றி கைகொடுத்து கொண்டே இருக்குமாம். இவர்களிடம் பேச்சு திறமை அதிகம் இருக்கும். இவர்களின் பேச்சு திறமையால் இவர்கள் வாழ்க்கையில் பெரிய சாதனை செய்வார்கள். சாதிக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் அவர்கள் அதற்கு முழு உழைப்பையும் போடக்கூடிய திறமை படைத்தவர்கள். அதே போல் இவர்கள் வாழ்க்கையும் அவ்ரகளின் எண்ணம் போல் அமைந்து விடும்.
6ஆம் தேதி:
எண் கணித்தபடி 12 மாதங்களிலும் 6 தேதி பிறந்தவர்களுக்கு இறை ஆற்றல் அதிகம் இருக்கும். இவர்கள் தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருப்பார்கள். மிகவும் நேர்மையான சிந்தனை கொண்டவர்கள். இவர்களுக்கு கட்வுளின் அருளால் எப்பொழுதும் இவர்கள் நினைத்த காரியம் இவர்களுக்கு வெற்றியை கொடுக்கிறது.
11 ஆம் தேதி:
எண் கணித்தபடி 12 மாதங்களிலும் 11 ஆம் தேதி பிறந்தவர்கள் மிகவும் மென்மையானவர்கள். இவர்களுக்கு அதீத மன தைரியமும் நம்பிக்கையும் இருக்கும். இவர்கள் மனதில் நேர்மறையான சிந்தனை கொண்டவர்கள் ஆதலால் இவர்களால் அவர்கள் நினைத்த விஷயத்தை எளிதில் அடையக்கூடிய ஆற்றல் இயற்கையாவே இருக்கிறது.
12 ஆம் தேதி:
எண் கணித்தபடி 12 மாதங்களிலும் 12ஆம் தேதி பிறந்தவர்களுக்கு தலைமைத்துவ குணம் பிறவியில் இருந்தே இருக்கிறது. இவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை இவர்கள் முழுமூச்சாக பயன்படுத்தி செயல்படுத்துவார்கள். இவர்கள் தோல்வியே அடைந்தாலும் துவண்டு போகாமல் மீண்டும் முயற்சி செய்து வெற்றி அடையும் ஆற்றல் உடையவர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |