தீர்க்கமுடியாத துயரங்கள் தீர குடும்பத்துடன் செய்யவேண்டிய வழிபாடு
மனிதனாக பிறந்த எல்லோரும் கட்டாயம் ஏதேனும் ஒரு நேரத்தில் கடினமான காலத்தை கடந்தாகவேண்டிய நிலை உருவாகும். அப்பொழுது அவன் தன்னிலை இழந்து எந்த ஒரு முயற்சி எடுத்தாலும் அதில் தோல்வியை சந்தித்து மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பான். அவ்வாறான வேளையில் நம் மனதிற்கு தைரியம் கொடுப்பது இறைவழிபாடு மட்டுமே.
மேலும், அந்த நேரத்தில் நாம் பிற தெய்வங்களை வழிபாடு செய்வதை காட்டிலும் நம்முடைய குலதெய்வத்தை சரண் அடைவதே நமக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கும். அதாவது இந்த நேரத்தை கடந்து செல்ல முடியவே முடியாது என்று மனம் துவண்டு போகும் பொழுது குடும்பமாக நாம் குலதெய்வம் சென்று வழிபாடு மேற்கொண்டால் அந்த கஷ்ட காலம் குறைந்து நிம்மதி கிடைப்பதை நாம் பார்க்கலாம்.
அப்படி கோயிலுக்கு செல்ல முடியவில்லை என்றால், வீட்டில் இருந்தபடியே குலதெய்வ வழிபாட்டை செய்யலாம். வீட்டில் இருந்து வழிபாடு செய்யபவர் குலதெய்வத்திற்கு உகந்த நாளை தேர்ந்தெடுத்து அன்றைய நாள் வீடுகளை சுத்தம் செய்து குடும்ப உறுப்பினர் அனைவருடனும் இருந்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இந்த பூஜையை காலை 6 மணி அளவில் செய்வது சிறப்பாக இருக்கும். பூஜை அறையில் குலதெய்வத்திற்கு என்று மண் அகல் விளக்கில் தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து, ஒரு சொம்பில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் துளசி இலைகளைப் போட்டு குலதெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்யுங்கள்.
முடிந்தால் குலதெய்வத்திற்கு இஷ்டமான பிரசாதத்தை நைவேத்தியமாக வைக்கலாம். பிறகு, ஒரு மஞ்சள் நிற துணியில் குலதெய்வத்தை வேண்டி உங்களால் இயன்ற அளவு காணிக்கையை குடும்பத்தில் உள்ளவர்கள் மூலமாக வைக்க வேண்டும்.
அந்த காணிக்கையை நாம் குல தெய்வம் கோயிலுக்கு செல்லும் பொழுது சேர்த்து விட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நிச்சயம் குடும்பத்தில் நல்ல மாற்றம் நடப்பதை நாம் காணலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |