நீங்கள் பிறந்த தேதி என்ன? உங்கள் ஆளுமையை சொல்லும் எண் கணிதம்
ஜோதிடத்தில் எண் கணிதம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த எண் கணிதம் கொண்டும் ஒருவரின் வாழ்க்கை எவ்வாறு அமையும் என்று கணித்து விடலாம். அப்படியாக, ஒருவர் பிறந்த தேதி வைத்து அவர்களின் ஆளுமை திறன் எவ்வாறு இருக்கும் என்று எண் கணிதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்.
அதாவது, ஒருவர் பிறந்த தினம் 11 என்றால் அதை கூட்டினால் 2 என்ற எண் வரும். இப்படியாக, நீங்கள் பிறந்த தேதியை வைத்து உங்கள் ஆளுமை திறனை தெரிந்து கொள்ளுங்கள்.
எண் 1:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் இயற்கையாகவே தலைமைப்பண்பை கொண்டவர்கள். மனதில் உறுதியும், நம்பிக்கையும் உடையவர்க்ளாக காணப்படுவார்கள். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அதை நாம் சமாளித்து கொள்ளலாம் என்ற உறுதி இவர்களிடம் எப்பொழுதுமே இருக்கும்.
எண் 2:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் மென்மையானவர்கள். எதையும் சமாளித்து செல்லும் திறமை இவர்களிடம் இருக்கும். அன்பால் ஒரு விஷயத்தை சாதிக்கும் ஆற்றல் இவர்களுக்கு இயற்கையாவே பெற்று இருப்பார்கள். எல்லோரிடமும் மிகவும் எளிமையாக பழகக்கூடியவர்கள்.
எண் 3:
இவர்களிடம் மிக சிறந்த படைப்பாற்றலை காணலாம். கலை, இசை அல்லது எழுத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். மிகவும் வசீகரமான தோற்றம் கொண்டவர்கள். இவர்கள் பேச்சு பிறரை கவரும் வகையில் இருக்கும்.
எண் 4:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் நடைமுறையாக மிக சிறந்த உழைப்பாளி. இவர்களை நம்பி நாம் பழகலாம். எதையும் ஆராய்ந்து பிறருக்கு யோசனை கொடுப்பதில் சிறப்பானவர்கள்.
எண் 5:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் சுறுசுறுப்பான நபராக இருப்பார்கள். இவர்கள் முழு சுந்தரத்தை விரும்புபவர்கள். இவர்கள் வாழ்க்கையில் புதிய விஷயங்களை தேடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். நட்பு வட்டாரம் சற்று இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
எண் 6:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் இயற்கையை அதிகம் விரும்புபவர்கள். மனதில் இரக்க குணமும் பொறுப்புணர்வும் அதிகம் கொண்டவர்கள். இவர்களுக்கு வளர்ப்பு பிராணிகள் மீது அதிகம் விருப்பம் இருக்கும்.
எண் 7:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் அறிவு மற்றும் ஞானத்தை தேடி செல்ல அதிக ஆர்வம் உடையவர்கள். சமயங்களில் தனிமை விரும்பியாகவும் இருக்கிறார்கள். இவர்களிடம் இறைநம்பிக்கையும் ஆர்வமும் அதிக அளவில் இருக்கும்.
எண் 8:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் அதிக அளவில் நேர்மறை ஆற்றல் கொண்டவர்கள். இவர்கள் எதையும் சாதிக்கும் திறன் படைத்தவர்கள். இவர்கள் இலட்சியத்தை அடைய மிகவும் போராடுபவர்கள். உழைப்பில் சிறந்து விளங்குபவர்கள்.
எண் 9:
இந்த எண்ணில் பிறந்தவர்கள் ஒரு ஞானி என்று தான் சொல்ல வேண்டும். அனைத்து ராசி ஜீவன்களுக்கும் உதவும் தன்மை கொண்டவர்கள். வாழ்க்கை அனுபவத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்பவர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |