இந்த தேதியில் பிறந்த ஆண் குழந்தைகளால் தந்தைக்கு ராஜயோகம் உண்டாகுமாம்

By Sakthi Raj Nov 27, 2025 12:30 PM GMT
Report

ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. எண் கணிதம் கொண்டும் ஒருவருடைய எதிர்காலம் அவர்களுடைய நிகழ்கால வாழ்க்கை என்று நம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.

அப்படியாக எண் கணிதத்தில் குறிப்பிட்ட ஒரு தேதியில் பிறந்த ஆண் குழந்தைகளால் அவர்களுடைய தந்தைக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும் அவர்கள் பிறந்த பிறகு அவர்களுடைய தந்தையின் வாழ்வில் ஒரு மிகப்பெரிய மாற்றமும் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.

அவர்கள் எந்த தேதிகள் பிறந்தவர்கள் என்று பார்ப்போம். இந்த எண் கணிதம் தெரிந்து கொள்வதற்கு நம்முடைய பிறந்த தேதியை கூட்டிக் கொள்ள வேண்டும். அதாவது ஒருவர் பிறந்த தேதி 27 என்றால் அதை கூட்டினால் 9 வரும்.

இந்த தேதியில் பிறந்த ஆண் குழந்தைகளால் தந்தைக்கு ராஜயோகம் உண்டாகுமாம் | Boy Born These Dates Are Lucky To Their Fathers

ஆக அவருடைய எண் ஆனது ஒன்பது ஆகும். அந்த எண்ணை கொண்டு நாம் அவர்களுடைய எண் கணிதத்தை தெரிந்து கொள்ளலாம். அப்படியாக,  எண் 6ல் பிறந்த ஆண் குழந்தைகளால் அவர்களுடைய தந்தைக்கு ஒரு மிகப்பெரிய அளவில் ஒரு மாற்றம் உண்டாகும் என்று சொல்கிறார்கள்.

நாளை முடிவிற்கு வரும் சனியின் வக்ர நிலை- இனி இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட் தான்

நாளை முடிவிற்கு வரும் சனியின் வக்ர நிலை- இனி இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட் தான்

அதாவது எந்த மாதத்திலும் 6, 15, 24 என்ற தேதிகளில் பிறந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் பிறந்த பிறகு அவர்களுடைய தந்தைக்கு தொழில் ரீதியாக ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் கிடைத்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல் ஒரு ஆண் குழந்தை எண் 5 அதாவது எந்த மாதத்தை எடுத்துக் கொண்டாலும் 5, 14, 23 என்ற தேதியில் பிறந்திருந்தால் அவர்கள் பிறந்த பிறகு அந்த குழந்தையின் தந்தைக்கு தொழில் ரீதியாக ஒரு மிகப்பெரிய கோடீஸ்வர வாய்ப்புகள் கிடைத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த தேதியில் பிறந்த ஆண் குழந்தைகளால் தந்தைக்கு ராஜயோகம் உண்டாகுமாம் | Boy Born These Dates Are Lucky To Their Fathers

ஒரு சில வீடுகளில் நாம் பார்த்திருப்போம், குழந்தை பிறந்ததற்கு பிறகு அவர்களுடைய வாழ்க்கைத் தரமே மாறி இருக்கும். அந்த மாதிரியான மாறுதல்களை பெறக்கூடிய அமைப்பு இந்த எண் 5ல் பிறந்த குழந்தைகளால் பெறக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இவர்களைப் போலவே எண் 8ல் பிறந்த குழந்தைகள் இருக்கிறார்கள்.

அதாவது எந்த மாதத்திலும் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த ஆண் குழந்தைகள் அவர்களுடைய பிறப்பிற்கு பிறகு அவர்களுடைய தந்தைக்கு ஒரு அதிக அளவில் செல்வம் சேர்ந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது தன் கைகளுக்கு வராத சொத்துக்கள் கூட இந்த ஆண் குழந்தை பிறந்ததற்கு பிறகு அவர்களுக்கு கைகளில் கிடைத்திருக்க கூடும் என்று சொல்கிறார்கள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US