சூரியன் புதன் உருவாக்கும் புதாத்திய ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!
ஜோதிட சாஸ்த்திரத்தின் அடிப்படையில், கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
அந்தவகையில், முக்கிய இரண்டு கிரகங்களின் சேர்க்கையாக மார்ச் மாதத்தில் கிரகங்களின் அரசனாக திகழும் சூரியன் மற்றும் கிரகங்களின் இளவரசனாக அறியப்படும் புதன் இணைவதால் உருவாகும் புதாதித்ய யோகம், சில ராசிகளுக்கு பேரதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது.

அப்படி குறித்த ராஜயோகத்தால் தொழில், பொருளாதாரம் மற்றும் குடும்ப வாழ்வில் சாதக பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த சூரியன் மற்றும் புதன் உருவாக்கும் புதாத்திய ராஜயோகமானது தொழில் ரீதியில் பல்வேறு வகையிலும் சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.
இந்த காலகட்டத்தில் புதனின் ஆசியால் அறிவாற்றல் மற்றும் மனதில் தெளிவு பிறக்கும். சூரிய பகவானின் ஆசியால் தலைமை பதவியில் அமரும் வாய்ப்பு காணப்படுகின்றது. நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
பொருளாதத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர் குடும்பத்தில் பெரியவர்களுடன் இணைந்து பேசி முடிவு செய்வது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
ரிஷபம்

இந்த அரிய புதாத்திய ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமாக பலன்களை அனுபவிக்கம் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு விடிவு கிடைக்கும்.
சூரிய பகவானின் ஆசியால் பணியிடத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
இந்த வாரத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பல நல்ல விடயங்களுக்கு அத்திவாரமாக அமையும். குறிப்பாக நிதி நிலையில் அமோக முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்

மிதுன ராசியினருக்கு இந்த ராஜ யோகமானது வியாபாரம் மற்றும் தொழில் ரீதியில் இதுவரையில் இல்லாத முன்னேற்ற பலன்களை கொடுக்கப்போகின்றது.
குடும்ப உறவுகள் மத்தியில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும்.
இந்த காலகட்டத்தில் எடுக்கும் முடிவுகள் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் என்பதால், சரியான சிந்தித்து முறையான திட்டமிடலின் கீழ் முடிவுகளை எடுப்பது சிறந்தது. பணவரவு திருப்பதிகரமாக இருக்கும் ஆனால் செலவு செய்வதில் நிதானம் தேவை.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த புதாத்திய ராஜயோகமானது மார்ச் 14 ஆம் திகதியின் பின்னர் நல்ல முன்னேற்ற வாய்ப்புகளை கொடுக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும்.
எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும் சூரியனின் ஆசியால் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான சில முடிவுகளை எடுப்பீர்கள்.
இந்த ராசியினரின் காதல் வாழ்க்கையிலும் சாதகமான சூழல் உருவாகும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சிகரமான நேரத்தை கழிப்பதற்கான வாய்ப்பு அமையும்.