குரு உபதேசம் பெறாமல் மூல மந்திரங்களை சொல்லலாமா? தெரிந்து கொள்ள வேண்டியவை..

By Sakthi Raj Oct 03, 2026 11:45 AM GMT
Report

நம்முடைய வழிபாடுகளில் மந்திரம் என்பது மிகவும் முக்கியமான ஒரு வழிபாடாக பார்க்கப்படுகிறது. மந்திரங்கள் என்பது வெறும் சொற்கள் மட்டுமல்ல. அவை குறிப்பிட்ட மொழி அதிர்வுகளையும் தெய்வத்தன்மையையும் கொண்ட சக்தி வடிவங்களாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், மந்திரங்களை நாம் குரு உபதேசம் இல்லாமல் பாராயணம் செய்யலாமா? என்கின்ற சந்தேகங்கள் இருக்கும். அதைப்பற்றி பார்க்கலாம். சாஸ்திர விதிகளின் அடிப்படையில் மூல மந்திரங்களை குருவின் வழியாகவே உபதேசம் பெற்று ஜெபம் செய்ய வேண்டும்.

குரு உபதேசம் பெறாமல் மூல மந்திரங்களை சொல்லலாமா? தெரிந்து கொள்ள வேண்டியவை.. | Can We Chant Mantras Without Guru Guidance

மிதுன ராசிக்காரர்கள் தொழிலில் கோடீஸ்வரராக செய்ய வேண்டிய விஷயம் என்ன?

மிதுன ராசிக்காரர்கள் தொழிலில் கோடீஸ்வரராக செய்ய வேண்டிய விஷயம் என்ன?

குருவின் உபதேசம் என்பது இங்கு வெறும் வார்த்தை பரிமாற்றம் அல்ல. அது குருவினால் கிடைக்கக்கூடிய ஆசீர்வாதம் மற்றும் வழிகாட்டுதல் அடங்கிய ஒரு சக்தி பரிமாற்றமாக இருக்கிறது.

மேலும், குறிப்பிட்ட சில சக்தி வாய்ந்த மூல மந்திரங்கள் வீட்டில் ஜபிக்க கூடாதவையாகவும் அல்லது குறிப்பிட்ட கடுமையான நிஷ்டைகளுடன் மட்டுமே நாம் ஜெபிக்க வேண்டிய ஒன்றாகவும் இருக்கலாம்.

குரு உபதேசம் பெறாமல் மூல மந்திரங்களை சொல்லலாமா? தெரிந்து கொள்ள வேண்டியவை.. | Can We Chant Mantras Without Guru Guidance

ஜாதகத்தில் லக்னத்தில் சனி பகவான் இருந்தால் அந்த நபர் எப்படிப்பட்டவராக இருப்பார் ?

ஜாதகத்தில் லக்னத்தில் சனி பகவான் இருந்தால் அந்த நபர் எப்படிப்பட்டவராக இருப்பார் ?

மேலும், மந்திரங்களை நாம் தாமாக உச்சரிக்கும் போது அது தவறான ஒலி பிழை ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் ஒரு மந்திரத்தின் பொருள் அதனுடைய வரலாற்று தெரிந்து கொள்வது நம்முடைய ஆன்மீக அறிவை வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும்.

முடிந்தவரை குரு உபதேசம் பெற்று மந்திரம் பாராயணம் செய்வது நன்மை என்றாலும் குரு உபதேசம் தேவைப்படாத பொதுவான துதி பாடல்கள் கீர்த்தனைகள், ஸ்தோத்திரங்களை தாராளமாக எல்லாரும் பாராயணம் செய்யலாம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US