அட்சய திருதியை அன்று சுப காரியங்கள் செய்யலாமா?
இந்து மத சுப தின நாட்களில் அட்சய திருதியை மிகவும் அதிர்ஷ்டமான நாளாக கருதப்படுகிறது. 2025ஆம் ஆண்டு அட்சய திருதியை வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி வருகிறது. இந்த நாள் மிகவும் விஷேசம் மற்றும் புனிதமான நாளாக கருதப்படுவதால், எந்த காரியங்கள் செய்தாலும் அவை இரட்டிப்பு பலன்களை கொடுக்கும் என்கிறார்கள்.
அதனால், அன்றைய தினம் சுப காரியங்கள் செய்வதால் நமக்கு எண்ணற்ற நேர்மறை ஆற்றலை வழங்குகிறது. அதே போல் புதிய வீடு கட்டி அன்றைய தினம் புதுமனை புகுவிழா நடத்தலாம். அவ்வாறு செய்யும் பொழுது நம் வீட்டிற்கு மஹாலக்ஷ்மி தேவியின் அருளும், செல்வ செழிப்பும் நம்மை தேடி வரும்.
அதாவது இந்த நாளில் ஒரு புதிய வீட்டிற்குள் நுழைவது ஸ்திரத்தன்மை, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் தெய்வீக ஆசீர்வாதங்களை அழைப்பதாக கருதப்படுகிறது. அப்படியாக, அட்சய திருதியை அன்று புதுமனை புகுவிழா வைக்க வேண்டும் என்றால் ஏப்ரல் 30ம்தேதி காலை 5:41 மணி முதல் மதியம் 12:18 மணி வரை செய்யலாம்.
மேலும், அட்சய திருதியை 'நித்திய செழிப்புக்கான நாள்' என்று அழைக்கப்படுவதால், இந்நாளில் சுப வேலைகளைத் தொடங்க குறிப்பிட்ட முகூர்த்த நேரம் தேவையில்லை. அன்றைய நாள் முழுவதும் சுபமாக கருதப்படுகிறது.
பொதுவாக, ‘அக்ஷயம்’ என்பது ஒருபோதும் வற்றாது என்று பொருள். அதனால், அன்றைய தினம் செய்யப்படும் எந்த ஒரு பிரார்த்தனையும், தானங்களும் ,தொழில் முதலீடுகளும் நமக்கு குறைவில்லாத பலனை பெற்று கொடுக்கும்.
இந்த நாளில் திருமணங்கள் நடத்துவது தங்கம் வெள்ளி நகை வாங்கி சேர்ப்பது போன்ற விஷயங்கள் செய்வது நமக்கு வாழ்க்கையில் நல்ல திருப்புமுனையாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |