எதையும் துணிந்து செய்யும் தைரியம் கொண்ட 3 ராசிகள்.., யார் யார் தெரியுமா?

By Yashini Apr 27, 2025 03:28 PM GMT
Report

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசியைச் சேர்ந்தவர்களின் குணாதிசயங்களும், அந்த ராசியை ஆளும் கிரகத்தால் வேறுபட்டிருக்கும்.

அந்தவகையில், எந்த ஒரு செயலையும் துணிந்து செய்யும் தைரியம் கொண்ட 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.    

மேஷம்

  • இவர்கள் பிறவியில் இருந்தே தைரியசாலிகள்.
  • எந்த வேலையையும் செய்வதற்கு சற்றும் அச்சம் கொள்வதில்லை.
  • மாறாக அவற்றை துணிச்சலுடன் செய்வார்கள்.
  • மேலும் இவர்கள் வலுவான சுயமரியாதையைக் கொண்வர்கள்.
  • தவறான விஷங்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.
  • யாராவது தங்களின் சுயமரியாதையைப் புண்படுத்த முயன்றால், அதை எளிதில் விட்டுவிட மாட்டார்கள்.
  • பாதகமான சூழ்நிலைகளிலும் அமைதியை பேணுவார்கள்.
  • செய்யும் வேலையில் நேர்மையானவர்கள்.
  • எந்த வேலையையும் முழு அர்ப்பணிப்புடனும் இதயத்துடனும் செய்வார்கள்.
  • நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள்.
  • ஒவ்வொரு துறைகளிலும் வெற்றி பெறுவார்கள்.
  • கடின உழைப்பின் அடிப்படையில் தங்கள் செல்வத்தை ஈட்டுகிறார்கள்.

எதையும் துணிந்து செய்யும் தைரியம் கொண்ட 3 ராசிகள்.., யார் யார் தெரியுமா? | These 3 Zodiac Signs Are Brave In Tamil

சிம்மம்

  • எந்த வேலையையும் செய்ய பயப்படமாட்டார்கள்.
  • தங்கள் கடின உழைப்பில் முழு நம்பிக்கை வைத்து, எந்த வேலையையும் முழு நேர்மையுடன் செய்வார்கள்.
  • கொஞ்சம் கோபம் வேகமாக வரும். ஆனால் சில சமயங்களில் அமைதியாக இருப்பார்கள்.
  • மிகவும் நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள், மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள்.
  • எப்போதும் மற்றவர்களுக்கு நல்லது செய்வார்கள்.
  • மென்மையான இதயம் கொண்டவர்கள்.
  • ஒரு குழுவை சிறப்பாக நடத்தும் தலைமைத்துவ குணம் கொண்டவர்கள்.
  • எந்த சூழ்நிலையிலும் இவர்கள் தங்கள் குழுவை வலுவாக வைத்திருக்க நினைப்பார்கள்.
  • இவர்கள் தெளிவாக இருப்பதால், இவர்கள் நிறைய பேருக்கு எதிரிகளாக மாறுவார்கள்.
  • மேலும் திறமையானவர்கள், தைரியமானவர்கள், தன்னம்பிக்கை, சுயமரியாதை கொண்டவர்கள்.
  • தங்களுக்கு எதிராக எந்த தவறான விஷயத்தையும் இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.

எதையும் துணிந்து செய்யும் தைரியம் கொண்ட 3 ராசிகள்.., யார் யார் தெரியுமா? | These 3 Zodiac Signs Are Brave In Tamil

விருச்சிகம்

  • இவர்கள் சிங்கத்தைப் போலவே தைரியசாலிகள்.
  • பெரும்பாலும் இவர்கள் போலீஸ், மருத்துவம், ராணுவத்தில் தான் சேர விரும்புவார்கள்.
  • தங்கள் இலக்குகளில் தீவிரமாக இருப்பார்கள்.
  • எந்த வேலையையும் செய்ய பயப்படுவதில்லை.
  • இவர்கள் யாருக்கு முன்பும் தலைவணங்க விரும்பமாட்டார்கள்.
  • சிறு விஷயங்களுக்கும் கோபப்படுவார்கள்.
  • இவர்களின் சுயமரியாதைக்கு எந்த குறைவும் இருக்கக்கூடாது.
  • மேலும் இந்த ராசிக்காரர்கள் தங்களின் எந்த வேலையிலும் மற்றவர்கள் தலையிடுவதை விரும்ப மாட்டார்கள்.
  • சுதந்திரமான மனம் கொண்டவர்கள்.
  • இவர்களுக்கும் கோபம் அதிகமாக வரும்.
  • இவர்கள் யாரையும் தங்களை விட உயர்ந்தவர்களாகக் கருதுவதில்லை. 
  • இவர்கள் தங்கள் வேலையை முழுமையான திட்டமிடலுடன் செய்வார்கள்.

எதையும் துணிந்து செய்யும் தைரியம் கொண்ட 3 ராசிகள்.., யார் யார் தெரியுமா? | These 3 Zodiac Signs Are Brave In Tamil

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US