12 ஆண்டுகளுக்கு பிறகு மீனத்தில் குரு- கோடி கோடியாய் அள்ளும் ராசிகள் யார்?
வருகின்ற மே 2025ல், குரு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசியில் பயணம் செய்ய உள்ளார். புதனின் வீடான மிதுன ராசியில் குருவின் சஞ்சாரம் மிகவும் நற்பலன்களை கொடுக்க கூடியது. இந்த பயணம் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தேடி கொடுக்க போகிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு மே 2025 முதல் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். உங்கள் ராசியில் குருவின் இரண்டாவது பார்வை இருப்பதால் சமுதாயத்தில் நற்பெயர் உண்டாகும். தொழில் வட்டாரத்தில் உங்களுக்கான சிறப்பு பெயர்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் யோசனைகள் உருவாகும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு மே 2025 முதல் அவர்களின் கடின உழைப்பின் வழியாக நல்ல மாற்றத்தை பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரமும் பெயரும் கிடைக்கும். மனதில் நேர்மறை சிந்தனைகள் பெருகும். மனதில் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு மே 2025 மாதம் மிகவும் அதிர்ஷ்டமான மாதமாகும். அரசு பணிக்காக முயற்சி செய்யும் மாணவர்கள் நல்ல வேலையை பெறுவார்கள். பொருளாதார நிலை முன்பை விட சிறந்து விளங்கும். உங்களின் காதல் வாழ்க்கை சிறப்பான முறையில் அமையும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு மே 2025 முதல் கனவுகள் நினைவாகும் காலம் ஆகும். மனதில் தெளிந்த சிந்தனையும், நம்பிக்கையும் பிறக்கும். வாகனங்கள் அல்லது ரியல் எஸ்டேட் தொடர்பானவர்களின் பணிகளில் நல்ல லாபம் பெறுவீர்கள். பெரிய முடிவுகளை எடுக்கும் பொழுது பெரியவர்கள் ஆலோசனை பெறுவது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |