ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் உடையவர்கள் திருமணம் செய்யலாமா?

By Yashini Mar 18, 2024 07:32 AM GMT
Report

பொதுவாக ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் கொண்டவர்கள் திருமணம் செய்வதை அனைவரும் தவிர்ப்பதே நல்லது.

இவ்வாறு ஒரே ராசி, நட்சத்திரத்தை உடையவர்கள் திருமணம் செய்யும்பொழுது கோச்சார நிலைப்படி இருவருக்கு ஒரே மாதிரியான கிரக சாரத்தை ஏற்படுத்தும்.

இருவரும் ஒரே ராசி, நட்சத்திரம் என்பதால் பையனுக்கு, அஷ்டமத்தில் குரு வந்தால் பெண்ணிற்கும் அந்த நேரத்தில் குரு அஷ்டமத்தில் வரும்.

ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் உடையவர்கள் திருமணம் செய்யலாமா? | Can We Get Married Under The Same Zodiac Sign

அதே போல ஏழரைச் சனியும் இருவருக்கும் வந்தால் சேர்ந்தே வரும். இதனால் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும்.

ஏனெனில், கணவருக்கு மோசமான கோச்சார கிரக நிலை இருந்தால் மனைவிக்கு அந்த சமயத்தில் சுபமான அல்லது மிதமான கோச்சார பலன் இருத்தல் அவசியம்.

அப்போது தான் கொஞ்சமாவது சிரமப்படாமல் ஒருவர் கஷ்டப்பட்டாலும் இன்னொருவர் குடும்பத்தை நடத்துவார்.

இதனால் தான் ஒரே ராசி ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்யக்கூடாது என பெரியவர்களும், ஜோதிடர்களும் கூறுகின்றனர்.       

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US