2026: நாளை சந்திர கிரகணத்தின் போது கிரிவலம் செல்லலாமா?

By Sakthi Raj Mar 02, 2026 05:30 AM GMT
Report

ஒரு மனிதன் வாழ்க்கையில் அதீத துன்பத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றால் நிச்சயம் அவர்கள் திருவண்ணாமலை சென்று கிரிவலம் மேற்கொண்டால் அவர்களுடைய கர்ம பாவங்கள் ஆனது குறைந்து ஒரு நல்ல பலன் கிடைக்கும். அப்படியாக மாசி மாதம் பௌர்ணமி தினத்தை அடுத்து நாளை திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

மேலும், மாசி மாத பௌர்ணமி மார்ச் 2 இன்று மாலை 6:29 மணிக்கு தொடங்கி நாளை மாலை 5. 52 மணி வரை உள்ள நிலையில் நாளை மாலை சந்திர கிரகணம் நடைபெற இருக்கிறது. அப்படியாக சந்திர கிரகணம் பொழுது நாம் கிரிவலம் செல்லலாமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். அதை பற்றி பார்ப்போம்.

2026: நாளை சந்திர கிரகணத்தின் போது கிரிவலம் செல்லலாமா? | Can We Go Giri Valam On Lunar Eclipse

அதாவது சந்திர கிரகணத்தின் பொழுது நாம் கட்டாயம் கிரிவலம் செல்லலாம் என்று சொல்கிறார்கள். அதைவிட முக்கியமாக கிரகண நேரங்களில் நாம் கிரிவலம் செல்லும் பொழுது நமக்கு இரு மடங்கு பலன் தருவதாகவும் செல்கிறார்கள்.

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி சுக்கிரன் சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு கஷ்டம் விலகப் போகிறதாம்

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி சுக்கிரன் சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு கஷ்டம் விலகப் போகிறதாம்

ஆனால் கர்ப்பிணி பெண்கள் மட்டும் கிரகணம் நேரங்களில் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும். அதோடு குறிப்பாக கிரகணம் என்பது மனிதனுக்கு மட்டுமே இறைவனுக்கு கிடையாது. மேலும், தேவர்கள் கிரகணம் சமயத்தில்தான் தவம் செய்வார்கள்.

அந்த சமயத்தில் தவம் செய்தால் நூறு மடங்கு நமக்கு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே நதிகள், தீர்த்த குளங்களின் கரையில் கிரகண நேரங்களில் தவம் செய்தால் நம்முடைய ஆன்மீகம் சிந்தனையானது இன்னும் அதிகரிக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US