ஜோதிடம்: தெருநாய்களுக்கு தினமும் உணவு வழங்குபவர்களா? இதை பின்பற்றுங்கள்
இந்த உலகம் நாம் செய்யும் செயலையும், நம்முடைய எண்ணங்களையும் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறது. நாம் செய்த நன்மை தீமைக்கான பலனை அவை நமக்கு ஒரு நாள் திரும்ப கொடுத்து விடுகிறது.
அப்படியாக, சக மனிதர்களுக்கே உதவ யோசிக்கும் காலத்தில் 5 அறிவு ஜீவன்களுக்கும் இன்றளவும் சிலர் அவர்களால் முடிந்த சில உதவிகள் செய்து வருகின்றனர். அதில் முக்கியமாக ஆதரவற்று இருக்கும் தெரு நாய்களுக்கு சிலர் அவர்களால் முடிந்த உணவை கொடுத்து வருவார்கள்.
இன்னும் சிலர் வீடுகளுக்கு தெருவில் இருக்கும் குட்டி நாய்களை எடுத்து வந்து வளர்ப்பார்கள். இவ்வாறு தெரு நாய்களுக்கு தினமும் உணவு வழங்குவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
நாம் தெரு நாய்களுக்கு நம்மால் முடிந்த உணவும் தண்ணீரும் வழங்கும் பொழுது சனி அல்லது ராகு கேது தோஷம் இருந்தால் அவை விலகும் என்கிறார்கள். அதே போல் வீடுகளில் நாய் வளர்க்க விரும்புபவர்கள் கருப்பு நாய் வளர்க்கும் பொழுது கிரகங்கள் அமைதியாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
அதோடு அவை நம் வீட்டை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கின்றன. முக்கியமாக ஒருவர் ஜாதகத்தில் சனி, ராகு கேதுவால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் நிச்சயம் வீடுகளில் நாய் வளர்க்கும் பொழுது அவர்களுக்கு உண்டாகும் பாதிப்புகளின் தாக்கம் குறையும் என்று ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.
இருப்பினும் சிலரால் வீடுகளில் நாய்களை வளர்த்து பராமரிக்க முடியாத சூழ்நிலை உருவாகும். அவர்கள் கட்டாயம் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வரும் பொழுது நல்ல தீர்வை பெறலாம். ஜாதகத்தில் சனி அசுப நிலையில் இருந்தால், அவர்களுக்கு சனியின் மகா தசை, காலங்களில் நிச்சயமாக ஒவ்வொரு நாளும் தங்கள் நாய்களுக்கு உணவளிக்க வேண்டும்.
அவ்வாறு செய்யும் பொழுது சனி பகவான் மனம் குளிர்ந்து அவர்களுக்கு நன்மை செய்கிறார். அது மட்டும் அல்லாமல், நாய்களுக்கு உணவு அளித்து வளர்க்கும் பொழுது நமக்கு நேர்மறை எண்ணங்கள் தோன்றுவதோடு, வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்களும் பிரச்சனைகளும் விலகுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |