வெற்றிகள் குவிய சனிக்கிழமைகளில் சொல்ல வேண்டிய மந்திரம்
சனிக்கிழமை என்றாலே சனிபகவானின் வழிபாட்டிற்கு உரிய முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது. மேலும், ஒருவரது வாழ்க்கையில் சனிபகவானின் ஆசீர்வாதம் மிக மிக அவசியமான ஒன்றாகும். அதாவது, நம்முடைய பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அருள் வழங்குபவர் சனி பகவான்.
அதோடு சனி பெயர்ச்சி காலங்களில் சனியின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படும். அதனால் அவரால் உண்டாகும் அந்த கேடு பலனை குறைக்கவும், செல்வ வளம் பெருகவும் நாம் கட்டாயம் சனி பகவானை வழிபாடு செய்வது மிக சிறந்ததாகும்.
அதனால் சனிக்கிழமைகளில் சனி பகவானின் ஆலயம் சென்று அவருக்கு விளக்குகள் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்து வந்தால் சனி பகவானால் உண்டாகும் மனக்கஷ்டம், மற்றும் தடைகள் விலகும்.
பொதுவாக நம்முடைய இறைவழிபாட்டில் மந்திரங்களுக்கு அதிக சக்திகள் உண்டு. அந்த வகையில் சனிக்கிழமைகளில் சனிபகவானின் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்வதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும்.
மந்திரங்கள்:
"ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரோம் சஹ ஷனைச்சராய நமஹ"
மேற்கண்ட சனிபாகவனின் சக்தி வாய்ந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து நீராடி மனதை அமைதி நிலைக்கு கொண்டு வந்து வழிபாடு செய்த பின் இந்த மந்திரத்தை சொல்லவேண்டும்.
இந்த மந்திரத்தின் பலனை அதிகரிக்க உதவும் வகையில் சனிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்வதால் சனி பகவானின் தாக்கம் குறைந்து காணப்படும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |