வாஸ்து: மறந்தும் பூஜை அறையில் தீப்பெட்டி வைக்காதீர்கள்
இந்து மதத்தில் நம் வீடுகளில் பூஜை அறை என்பது கோயிலுக்கு நிகராக வழிபாடு செய்யும் இடம் ஆகும். அந்த பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது என்பது அவசியமான ஒன்றாகும்.
அந்த வகையில் விளக்கு ஏற்ற கட்டாயம் தீப்பெட்டி தேவை. பலரும் அந்த தீப்பெட்டியை அவர்களின் வசதிக்கு ஏற்ப பூஜை அறைகளில் வைத்து விடுவார்கள். ஆனால், அவ்வாறு பூஜை அறையில் தீப்பெட்டி வைப்பது என்பது எதிர்மறை ஆற்றலாக பார்க்கபடுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
நம்முடைய வாஸ்து சாஸ்திரப்படி பூஜை அறையில் தீப்பெட்டி வைப்பது என்பது எதிர்மறை சக்தியை அதிகரிக்க செய்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு தீப்பெட்டி வைப்பது மங்களகரமானது அல்ல என்று சொல்லப்படுகிறது.
அதனால் வீடுகளில் நிதி பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். அதாவது தீப்பெட்டி என்பது சக்தியையும் அழிவையும் குறிக்கிறது.
அதை நாம் பூஜை அறையில் வைக்கும் பொழுது நேர்மறை சக்திகள் இடையே சில தடுமாற்றம் உண்டாகும் என்கிறார்கள்.
அதனால் வீடுகளில் சண்டைகள் உருவாக வாய்ப்புள்ளதா சொல்லப்படுகிறது. நாம் தீப்பெட்டி வைப்பதற்கு ஏற்ற இடமாக சமையலறை இருக்கிறது. சமயலறையில் தான் நெருப்பு இருப்பதால் அங்கு தீப்பெட்டி வைப்பது நல்ல பலன் கொடுக்கும்.
அதே போல் பூஜை அறையில் விளக்கு ஏற்றிய தீக்குச்சியை உடனே அகற்றி விடுவது நல்லது என்கிறார்கள். அதை அகற்றாமல் பூஜை அறையிலே வைப்பது வீட்டிற்கு வறுமை உண்டாக்கக்கூடும் என்கிறார்கள்.
மேலும், நம் பூஜை அறையில் தினமும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது என்று மட்டும் இல்லாமல், பூஜை அறையில் மந்திரங்களை ஒலிக்க செய்வது, நாமும் சிறிது நேரம் பூஜை அறையில் அமர்ந்து மந்திரங்கள் உச்சரிப்பது என்பது நம் வீட்டு பூஜை அறைக்கு தெய்விக ஆற்றலை பெற்று கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |