வாராஹி அம்மன் படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா?
எதிரிகளை அழித்து நல்லவர்களுக்கு நன்மை புரிபவள் வாராஹி அம்மன்.பலரும் வாராஹி அம்மனை தங்கள் இஷ்ட தெய்வங்களாக வைத்து வழிபாடு செய்கின்றனர்.அப்படியாக பலருக்கும் வாராஹி அம்மன் படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா?எந்த நாளில் பூஜை செய்யவேண்டும் என்ற சந்தேகம் இருக்கும்.அதை பற்றி பார்ப்போம்.
வாராஹி அம்மனை எவர் ஒருவர் மனதார நினைத்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் அம்மன் அருளால் வாழ்க்கையில் நல்ல மாற்றம் உருவாகும்.வாராஹி அம்மனை வழிபட மிகவும் சிறந்த நாளாக செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, அமாவாசை தினம், பௌர்ணமி தினம், பஞ்சமி திதி, ஆகும். பலருக்கும் வாராஹி அம்மன் படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்ய கொஞ்சம் பயமும் பதட்டமும் இருக்கும்.
அவர்கள் ஒரு தீபம் ஏற்றி அம்மனை மனதார நினைத்து வேண்டுதல் வைக்கலாம்.வாராஹி அம்மன் படம் வைத்து வழிபட வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் வழிபாடு செய்யலாம்.அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
மேலும் வாராஹி அம்மனுக்கு நெய்வேத்தியமாக பனைவெல்லம் வைத்து வழிபாடு செய்யலாம்.பிறகு வாராஹி அம்மனை மந்திரங்கள் தெரிந்தால் உச்சரிக்கலாம். இல்லையென்றால் 'ஓம் வாராஹி தேவியே துணை' என்று சொல்லி தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டம் நீங்கி நல்வாழ்வு அருளும் படி வேண்டி கொள்ளலாம்.
வேண்டுதல் முடிந்த பிறகு வாராஹி அம்மனுக்கு படைத்த நெய்வேத்தியதை எறும்புகள் இருக்கும் இடத்தில் வைத்து விடவேண்டும்.இவ்வாறு செய்யும் பொழுது நம்முடைய பாவங்கள் தீரும்.இந்த வழிபாட்டை ஒரு முறை என்று இல்லாமல் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
வாராஹி அம்மன் பார்வை யார் மீது விழுகிறதோ அவர்களுக்கு நிச்சயம் எதிர்பாராத வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |